Home
News

அது தான் இது.. இது தான் அது.. SIM கார்டு சிக்கலுக்கு அவசர அடி.. BSNL-க்கான புதிய App அறிமுகம்!

அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL - Bharat Sanchar Nigam Limited) ஆனது புதிய வாடிக்கையாளர் சேவைகளை மீட்டெடுப்பதிலும், நெறிப்படுத்துவதிலும் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்து உள்ளது. இந்நிறுவனம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வாடிக்கையாளர் பதிவு மொபைல் ஆப்பை நாடு தழுவிய அளவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்த ஆப் சஞ்சார் மித்ரா (Sanchar Mitra) என்று அழைக்கப்படுகிறது. புதிய சந்தாதாரர்களின் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி சரிபார்ப்புக்கு (Aadhaar-based e-KYC verification) பயன்படுத்தப்பட்ட முந்தைய சஞ்சார் ஆதார் ஆப் (Sanchar Aadhaar app) ஆனது பிஎஸ்என்எல் பொறியாளர்களால் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

SIM கார்டு சிக்கலுக்கு அவசர அடி.. BSNL-க்கான புதிய App அறிமுகம்!

முந்தைய ஆப் ஆனது ஒரு தனியார் விற்பனையாளரால் (Private Vendor) உருவாக்கப்பட்டது மற்றும் புதிய கனெக்ஷன்களை வழங்கும் போது, வாடிக்கையாளர் அடையாளங்களை டிஜிட்டல் முறையில் சரிபார்க்க (digitally verify customer identities) பிஎஸ்என்எல் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உரிமையாளர் கூட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டது.

சஞ்சார் ஆதார் ஆப்பின் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநருடனான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒப்பந்தம் ஆனது கடந்த நவம்பர் 2025 இறுதியில் காலாவதியானது. அதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் புதிய சிம் கார்டுகள் மற்றும் மாற்று சிம்களை வழங்குவது உட்பட வாடிக்கையாளர் பதிவு சேவைகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டன.

அதை உடனே சரி செய்யும் நோக்கத்தின் கீழ் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் சஞ்சார் மித்ரா ஆப்பை வெளியிட்டு உள்ளது. சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக அவசரகால சூழ்நிலைகளில் சஞ்சார் மித்ரா ஆப் உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக பிஎஸ்என்எல் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இந்த ஆப் இப்போது கர்நாடகா உட்பட நாடு தழுவிய அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இதை "சுதேசி" சொல்யூஷன் என்று அழைத்த பிஎஸ்என்எல், வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் திறமையான சேவைகளை வழங்குவதில் இந்த புதிய ஆப் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் குறிப்பிட்டு உள்ளது.

பிஎஸ்என்எல் தொடர்பான மற்ற முக்கிய அப்டேட்களை பொறுத்தவரை, சாட்காம் (Satcom) என்கிற சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் (Satellite communications spectrum charges) தொடர்பான "பஞ்சாயத்தில்" பிஎஸ்என்எல் நிறுவனத்திற்க்கு பாதமான தீர்ப்பு வந்துள்ளது. இதற்காக டாட் (DoT) என்கிற தொலைத்தொடர்பு துறையின் (Department of Telecommunications) பரிந்துரையை டிராய் நிராகரித்து உள்ளது.

தற்போது வரையிலாக பிஎஸ்என்எல் நிறுவனமானது, ​​இந்தியாவில் சாட்காம் சேவைகளை வழங்குவதற்கான சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் (Adjusted gross revenue - AGR) 1% மட்டுமே ஸ்பெக்ட்ரம் கட்டணங்களாக செலுத்துகிறது. இது இப்படியே தொடர வேண்டும் என்று டாட் (DoT) பரிந்துரைத்தது. ஆனால் அது அப்படி செயல்படக்கூடாது என்று டிராய் (TRAI) கூறி உள்ளது.

பிஎஸ்என்எல் அதன் ஏஜிஆர் (AGR) இல் 4% ஐ ஸ்பெக்ட்ரம் கட்டணங்களாக செலுத்தும் என்று டிராய் கூறியுள்ளது. இதன் மூலம் சாட்காம் ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் ஆனது அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும், இது தொழில்துறையில் உள்ள ஒவ்வொரு பங்குதாரருக்கும் நியாயமான "போட்டி மைதானத்தை" உருவாக்கும்.

எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது இந்தியாவில் அதன் ஸ்டார்லிங்க் சேவையை கூடிய விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இப்படி ஒரு பின்னடைவு வந்துள்ளது - சாட்காம் சேவையில் நம் கை மேலே ஓங்கியுள்ளது என்கிற சூழ்நிலையயை அப்படியே தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் நிறுவப்பட்ட கேட்வே வழியாக செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளை வழங்கும் ஒரே நிறுவனமாக பிஎஸ்என்எல் இருந்தது. இதனால், ஸ்பெக்ட்ரம் கட்டணமாக ஏஜிஆர் இல் 1% மட்டுமே வசூலிக்க அரசாங்கத்திற்கு சாத்தியம் இருந்தது, ஏனெனில் அது இயற்கையில் பாகுபாடற்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Sanchar Mitra App Launched Nationwide New Customer Registration Mobile App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X