சிறந்த சலுகைகளை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

அதேபோல் மற்ற தனியார் நிறுவனங்களை விட கம்மி விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.மேலும் இப்போது சிறந்த சலுகைகளை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 81 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தனிசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 100ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இதில்
நிர்ணயிக்கப்பட்ட 100ஜிபி டேட்டாவைத் தாண்டி, பயனர்கள் 80 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை அணுக முடியும். குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.இதுதவிர BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான சந்தாவையும் பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தில்பெறமுடியும்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் ரூ.599 திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும் ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் கிடைக்கிறது. மேற்கூறிய நன்மைகளுடன், BSNL நிறுவனம் இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு தினமும் இரவில் வரம்பற்ற டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை. அதேபோல் ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் விரைவில்
5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications