Home
News

அதிக நன்மைகளை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ஒரு சில திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் அதிக நன்மைகளை தருகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. மேலும் ஜியோ நிறுவனமும் இதேபோல் ஒரு திட்டத்தை வைத்துள்ளது ஆனால் நன்மைகள் மாறுபடுகிறது.

 திட்டத்

அதாவது ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். பின்பு ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல நன்மைகளை வழங்குகிறது ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் சில ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் 18 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி வேலிடிட்டி 150 ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 18 நாட்களுக்கு பிறகு நீங்கள் அழைப்புகளைச் செய்ய விரும்பினால், வேறு ஒரு திட்டத்தில் டாப்-அப் செய்ய வேண்டும்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 197 ப்ரீபெய்ட் திட்டத்தில் 18 நாட்களுக்கு மட்டுமே டேட்டா மற்றும் குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 150 நாட்களுக்கு வேலிடிட்டி உள்ளது. எனவே இதன் மூலம் உள்வரும் அழைப்புகள் (incoming calls) 150 நாட்களுக்கு கிடைக்கும். கம்மி விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி மட்டும் தேடும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.118 மற்றும் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டங்கள்

பிஎஸ்என்எல் ரூ.118 மற்றும் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டங்கள்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-118 என்று கூறப்படும் ரூ.118 திட்டம் ஆனது 0.5 டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த ரூ.118 திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும். பிஎஸ்என்எல் STV_147 என்று கூறப்படும் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 10ஜிபி டேட்டா, BSNL ட்யூன்களுக்கான அணுகல் உள்ளிட்ட சில நன்மைகளை மட்டுமே வழங்குகிறது. இந்த ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.185 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.185 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-185 என்று கூறப்படும் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 100 எஸ்எம்எஸ், BSNL ட்யூன்களுக்கான அணுகல் உள்ளட்ட சில நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த டேட்டா உபயோகத்திற்கு தினசரி வரம்பு இல்லை. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இணைய வேகம்80 கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் BSNL ட்யூன்ஸ் மற்றும்EROS now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலுடன் வருகிறது பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL's Rs.499 prepaid plan offering maximum benefits: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X