425 நாட்கள் வரை செல்லுபடியாகும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் சிறப்பான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் சமீபத்தில் வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் தொடர்ந்து மலிவு ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டத்தில் 425 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியுள்ளது.

ஆனால் வேறு எந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமும் அதன் திட்டங்களுடன் 425 நாட்கள் வேலிடிட்டியை வழங்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் அனைத்து இடங்களில் 4ஜி சேவையை கொண்டுவந்தால் இன்னும்அருமையாக இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்
அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை பெறமுடியும். எனவே இந்த திட்டத்தில் அதிக டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் உள்ளன. அதேபோல் இலவச BSNL ட்யூன்கள் மற்றும் ஓவர்-தி-டாப் (OTT) தளமான Eros Nowக்கான அணுகலை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தம் 24ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். கால் அழைப்பு நன்மை மட்டும் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 600 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டம் 365 நாட்களுக்கு ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைக்கான அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு விலை உயர்வை அறிவித்தது,அதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு
அதாவது ஏர்டெல் ரூ.149 திட்டமானது இப்போது விலை அதிகரிப்பிற்குப் பின்னர் இனி ரூ.179 என்ற விலையில் கிடைக்கும். இந்த திட்டம் இப்போது அதன் பயனர்களுக்கு 2ஜிபி டேட்டா நன்மையோடு, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையைவழங்குகிறது.

ஏர்டெல் ரூ. 219 திட்டம் இப்போது ரூ. 265 என்ற விலையில் கிடைக்கிறது. இது அதன் பயனர்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது. இதேபோல், முன்பு ரூ. 249 விலையில் கிடைத்த திட்டம் இனி ரூ. 299 என்ற விலையில் கிடைக்கும். இந்த திட்டம் இப்போது அதன் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையோடு,அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 298 விலை திட்டமானது இனி ரூ. 359 விலையில் கிடைக்கும். இந்த திட்டம் இப்போது அதன்பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மையோடு, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் அதன் பயனர்களுக்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அடுத்தபடியாக பட்டியலில் 56 நாட்கள் செல்லுபடியாகும் இரண்டு திட்டங்கள் இருக்கிறது.

இதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம், ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம், ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம், ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம், ரூ.698 ப்ரீபெய்ட் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்கள் விலை கூடஉயர்த்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications