Home
News

ஏர்டெலுக்கு சமமான நன்மை; பிஎஸ்என்எல்-ன் ரூ.1125/-ல் அதிரடி திருத்தம்!

திருத்தப்பட்டுள்ள பிஎஸ்என்எல் ரூ.1125/- ஆனது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199/- உடன் நேரடியாக போட்டியிடுகிறது. உடன் வோடபோனின் ரெட் இண்டர்நேஷனல் திட்டங்களான ரூ.1299/-ஐ விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது.

By Muthuraj

அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), தொடர்ச்சியான முறையில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களை போன்ற திட்டங்களையும், அதன் வழியிலான நன்மைகளையும் வழங்கி வருகிறது.

ஏர்டெலுக்கு சமமான நன்மை; பிஎஸ்என்எல்-ன் ரூ.1125/-ல் அதிரடி திருத்தம்!

அந்த பாணியானது நிறுவனத்தின் ப்ரீபெயிட் திட்டங்களை அடுத்து, போஸ்ட்பெயிட் திட்டங்களுக்குள்ளும் நுழைந்துள்ளது. சமீபத்தில் ​​திருத்தப்பட்ட பிஎஸ்என்எல் பட்ஜெட் திட்டங்கள் பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவற்றுடன் இணைந்துள்ளன.

திருத்தப்பட்டுள்ள பிஎஸ்என்எல் ரூ.1125/- ஆனது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199/- உடன் நேரடியாக போட்டியிடுகிறது. உடன் வோடபோனின் ரெட் இண்டர்நேஷனல் திட்டங்களான ரூ.1299/-ஐ விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது. அதாவது ரூ.1125/- ஆனது ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்பு நன்மைகளுடன் சேர்த்து, 90 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. இதே நன்மைகளை பார்தி ஏர்டெல் நிறுவனமானது ரூ.1199/-க்கு வழங்கி வருகிறது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

பிஎஸ்என்எல் ரூ.1125/- திட்டத்தைப் பற்றி இன்னும் விரிவாக பேசுகையில், இது வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குவதோடு சேர்த்து முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் 90 ஜிபி தரவ அளவிலான டேட்டா உடன் மொத்தம் 250 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்குகிறது. ஏர்டெல் மற்றும் இதர நிறுவனங்களின் போஸ்ட்பெயிட் திட்டங்களானது, தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குவது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏர்டெலுக்கு சமமான நன்மை; பிஎஸ்என்எல்-ன் ரூ.1125/-ல் அதிரடி திருத்தம்!

இது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஒரு பின்னடைவு ஆகும். மற்றொரு பின்னடைவாக இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் டேட்டா ரோல் ஓவர் அம்சம் கிடையாது. அதாவது அடுத்த பில்லிங் சுழற்சிக்கு பயன்படுத்தாத டேட்டாவை கொண்டு செல்ல முடியாது. இந்த டேட்டா ரோல் ஓவர் அம்சத்தினை, முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவைகள் தங்களது பெரும்பாலான திட்டங்களில் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெலுக்கு சமமான நன்மை; பிஎஸ்என்எல்-ன் ரூ.1125/-ல் அதிரடி திருத்தம்!

வோடபோ னின் ரூ.1299/-ஐ பொறுத்தவரை, டேட்டா ரோல்லோவர், வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ் (நிறுவனத்தின் வலைத்தளத்தின் படி) மற்றும் 75ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. தவிர ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் ஏர்டெல் டிவி மற்றும் வோடபோன் ப்ளே போன்ற பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது. இது அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மற்றொரு மற்றும் கடைசி பின்னடைவாகும்.

Best Mobiles in India

English summary
BSNL’s Rs 1125 Postpaid Plan Offers 90GB of Data, Unlimited Calling Same as Airtel and Vodafone.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X