300ஜிபி வழங்கும் பிஎஸ்என்எல்-ன் பெஸ்ட் பிராட்பேண்ட் திட்டம் இதுதான்.!

ரூ.249/-ல் இருந்து தொடங்கி ரூ.3000/-க்கும் மேலான பிராட்பேண்ட் திட்டங்களை கொண்டுள்ள பிஎஸ்என்எல், அந்த பட்டியலில் ரூ.1071/- என்கிற ஒரு பிராட்பேண்ட் திட்டத்தையும் கொண்டுள்ளது.

|

அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், இந்திய சந்தையில் உள்ள முன்னணி பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களில் ஒன்றாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் சுமார் 10 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளன. இந்த அளவிலான எண்ணிக்கை தான், ஒவ்வொரு பிரிவிலும் பல பிராட்பேண்ட் கட்டணத் திட்டங்களை பிஎஸ்என்எல் கொண்டிருக்க காரணமாகும்.

300ஜிபி வழங்கும் பிஎஸ்என்எல்-ன் பெஸ்ட் பிராட்பேண்ட் திட்டம் இதுதான்.!

ரூ.249/-ல் இருந்து தொடங்கி ரூ.3000/-க்கும் மேலான பிராட்பேண்ட் திட்டங்களை கொண்டுள்ள பிஎஸ்என்எல், அந்த பட்டியலில் ரூ.1071/- என்கிற ஒரு பிராட்பேண்ட் திட்டத்தையும் கொண்டுள்ளது. இது ஒரு 10Mbps அளவிலான வேகத்தில் 300ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குமொரு திட்டமாகும்.

குறிப்பிட்டுள்ள 300ஜிபி என்கிற வரம்பிற்கு பின்னர், இது எந்த வேக கட்டுப்பாடும் இல்லாத வரம்பற்ற 2Mbps வேகத்திலான டேட்டாவை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ரூ.1091/- பிராட்பேண்ட் திட்டத்துடன் கிடைக்கும் 300ஜிபி அளவிலான 10Mbps டேட்டா தீர்ந்த பின்னர் கிடைக்கும் 2 Mbps வேகமானது, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் போன்ற அடிப்படை ப்ரவுஸிங்கிற்கு போதுமான ஒரு வேகமாகும். இந்த திட்டத்துடன் சேர்த்து, ஒரு இமெயில் ஐடி-க்கு பிஎஸ்என்எல்-ன் 1எம்பி அளவிலான ப்ரீ ஸ்பேஸ் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேட்டா நன்மைகளை தவிர்த்து, இந்த திட்டம் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின்கீழ் இலவச குரல் அழைப்புகளையும் வழங்குகிறது. இந்த திட்டம், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கிடைக்கும் நிறுவனத்தின் இலவச குரல் அழைப்பு நன்மைகளை வழங்குவது ஒருபக்கம் இருக்க, மறுகையில், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைக்கும் இலவச குரல் அழைப்பு சேவை முடிவடையும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

இது பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களில் ஒன்றாகும். இருப்பினும், மற்ற டெலிகாம் நிறுவனங்கள் 300 Mbps (ஏர்டெல்), 150 Mbps (ACT Fibernet) போன்ற வேகங்களை வழங்கி வர, பிஎஸ்என்எல் நிறுவனமோ 100 Mbps என்கிற வேகத்தையே அதிகபட்சமாக கொண்டுள்ளது ஒரு பின்னடைவாகும்.

Best Mobiles in India

English summary
BSNL’s Rs 1091 Broadband Plan Now Offering 10 Mbps Speeds With 300GB FUP Per Month. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X