அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் பிரீமியம் பிராட்பேண்ட் திட்டங்களில் சிறப்பான மாற்றங்களை நிகழ்த்தி அறிவித்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,495, ரூ.1,599, ரூ.1,745, ரூ.2,295 மற்றும் ரூ.2,845/- டிஎஸ்எல் மற்றும் எப்டிடிஎச் பிராட்பேண்ட் திட்டங்களில் இனி வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குமென அறிவித்துள்ளது.
இனி இந்த பிரீமியம் திட்டங்களானது இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் 24 மணி நேரம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை அளிக்கும். இந்த புதிய மாற்றங்கள் (இன்று) பிப்ரவரி 1, 2018 தொடங்கி பான்-இந்தியா அடிப்படையில் செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிறைய விமர்சனங்களை பிஎஸ்என்எல் எதிர்கொண்டது
பிஎஸ்என்எல் நிறுவனமானது இந்த மாத தொடக்கத்தில் அதன் இலவச குரல் அழைப்பு நேரத்தை திருத்தியது மட்டுமின்றி சமீபத்தில் அதன் ஞாயிறு இலவச அழைப்பு நன்மையை திரும்ப பெறுவதாக அறிவித்தது, இதனால் நிறைய விமர்சனங்களை பிஎஸ்என்எல் எதிர்கொண்டது.
சுவாரசியம் என்னவெனில்
ஆனால் அரசு நடத்தும் இந்த டெலிகாம் நிறுவனமானது முற்றிலும் வேறுபட்ட திட்டங்களைக் கொண்டிருப்பதை உணர்த்தும் வண்ணம் அதன் பிரீமியம் பிராட்பேண்ட் திட்டங்களை திருத்தியுள்ளது. சுவாரசியம் என்னவெனில் இந்த அழைப்பு நன்மைக்கு எந்தவிதமான நேர வரம்பும் கிடையாது. சரி அழைப்பு நன்மைகளை தவிர்த்து இந்த திட்டங்களின் இதர நன்மைகள் என்பதை விரிவாக காண்ணோம்.
பிஎஸ்என்எல் பிபிஜி காம்போ யூஎல் 1495
இந்த ரூ.1495/- திட்டமானது பான் இந்தியா அடிப்படையில் நன்மைகளை அளிக்கிறது. திருத்தப்பட்ட ரூ.1,495/- ஆனது இந்தியாவில் எந்த நெட்வொர்க்குக்கும் உடனான வரம்பற்ற இலவச குரல் அழைப்புககளை வழங்குகிறது. உடன் 10 ஜிபிபிஎஸ் வேகத்திலான 70 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகம் 2 எம்பிபிஎஸ் ஆக குறையும்.
24 மணிநேரமும் இலவச அழைப்பு
முன்னதாக இந்த திட்டம் பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்குள் 250 நிமிடங்கள் இலவச குரல் அழைப்புகளையும், இதர நெட்வொர்க்குகளுக்கு இடையே இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற இலவச குரல் அழைப்பு நன்மையையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இப்போது 24 மணிநேரமும் இலவச அழைப்புகளை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் பிபிஜி காம்போ யூஎல் 1599
இந்த திட்டத்தில் அதன் தரவு நன்மைகள் மேம்படுத்தபட்டுள்ளது. இந்த திட்டம் இப்பொழுது 10 ஜிபிபிஎஸ் வேகத்திலான 80 ஜிபி அளவிலான டேட்டா வரை வழங்கும். டேட்டா வரம்பிற்கு பின்னர் இணைய வேகமானது 2 எம்பிபிஎஸ் என்று குறைக்கப்படும். உடன் இந்த திட்டமானது இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் 24 மணி நேரம் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் பிபிஜி காம்போ யூஎல் 1745, 2295 மற்றும் ரூ 2845
இந்த மூன்று திட்டங்களுமே இப்போது நாட்டில் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் உடனான வரம்பற்ற வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன. டேட்டா நன்மையை பொறுத்தமட்டில் ரூ.1,745/- திட்டமானது 16 எம்பிபிஎஸ் வேகத்திலான 70 ஜிபி அளவிலான அதிவேக தரவை அளிக்கிறது.
100ஜிபி அளவிலான டேட்டா
மறுகையில் உள்ள ரூ.2,295/- திட்டமானதும் 16 எம்பிபிஎஸ் வேகத்திலான 100ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது மற்றும் ரூ.2,845/- திட்டமானது 24 ஜிபிபிஎஸ் வேகத்திலான 100ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த மூன்று திட்டங்களுமே அவைகளின் டேட்டா வரம்பிற்கு பின்னர் 2 எம்பிபிஎஸ் வேகத்திலான வரம்பற்ற டேட்டாவை வழங்கும்.
இலவச இரவு அழைப்பு
முன்னதாக, மேற்கூறப்பட்டுள்ள இந்த திட்டங்கள் அனைத்துமே பிஎஸ்என்எல் நெட்வொர்க் உடனான 1000 நிமிடங்கள் இலவச குரல் அழைப்பு மற்றும் இரவு 10.30 மணி முதல் காலை 6:00 மணி வரையிலான இதர நெட்வெர்க்குகளுக்கு இடையேயான வரம்பற்ற இலவச இரவு அழைப்பு நன்மையை வழங்கி வந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 1-ஆம் தேதி (இன்று) முதல்
முன்னரே கூறியபடி பிஎஸ்என்எல் அதன் பிராட்பேண்ட் செயல்பாடுகளை கொண்டிருக்கும் வட்டாரங்களில், 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி (இன்று) முதல் இந்த திருத்தப்பட்ட திட்டங்களின் நன்மைகளை செயல்படுத்த தொடங்கும். மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்தின் டெலிகாம் செய்திகளுடன் இணைந்திருங்கள்.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.