Home
News

ரூ.99/- மற்றும் ரூ.319/- அறிமுகம்: பிஎஸ்என்எல் 'வாய்ஸ்' வாசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.!

ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும் இரண்டு "மினி பேக்" தரவு திட்டங்களை அறிமுகப்படுத்திய கையேடு அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் பிரத்யேக வாய்ஸ் திட்டங்களை அறிவித்துள்ளது.

By Muthuraj

ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும் இரண்டு "மினி பேக்" தரவு திட்டங்களை அறிமுகப்படுத்திய கையேடு அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் பிரத்யேக வாய்ஸ் திட்டங்களை அறிவித்துள்ளது.

ரூ.99 & ரூ.319 அறிமுகம்: பிஎஸ்என்எல் வாய்ஸ் வாசிகளுக்கு அதிர்ஷ்டம்.!

முன்னர் அறிவிக்கப்பட்ட பிரத்யேக டேட்டா திட்டங்களான ரூ.7/- ப்ரீபெய்ட் திட்டமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளிற்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான இணைய தரவை வழங்கும். மறுகையில் உள்ள பிஎஸ்என்எல் ரூ.16/- ஆனதும் ஒரு நாள் என்கிற செல்லுபடியை கொண்டு 2 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது.

ரூ.99 மற்றும் ரூ.319

ரூ.99 மற்றும் ரூ.319

இந்நிலைப்பாட்டில் பிஎஸ்என்எல் ஆனது ரூ.99/- மற்றும் ரூ.319/- என்கிற இரண்டு புதிய வாய்ஸ் கட்டணத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களானது முறையே 26 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்குசெல்லுபடியாகும் மற்றும் இவைகள் வரம்பற்ற குரல் அழைப்புகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

தரவு சேவைகளை உபயோகிக்காத வாடிக்கையாளர்

தரவு சேவைகளை உபயோகிக்காத வாடிக்கையாளர்

இந்த புதிய வாய்ஸ் எஸ்டிவி-க்கள் ஆனது நிறுவனத்தின் தரவு சேவைகளை உபயோகிக்காத வாடிக்கையாளர்களை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுகிறது. மேலும், அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் ரூ.99/- ஆனது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- திட்டத்துடன் விலை அளவில் போட்டியிடுகிறது.

எஸ்எம்எஸ் நன்மை.?

எஸ்எம்எஸ் நன்மை.?

ஜியோவின் ரூ.98/- ஆனது குரல் அழைப்பு மட்டுமின்றி மற்றும் தரவு சேவைகளையும் வழங்குகின்றது. உடன் பிஎஸ்என்எல் இந்த திட்டங்களுடன் எஸ்எம்எஸ் நன்மைகளையும் வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இவைகள் முழுமையான வாய்ஸ் திட்டங்களாக இருக்கலாம்.

வரம்பற்ற குரல் அழைப்பு

வரம்பற்ற குரல் அழைப்பு

ரூ.99/- என்கிற வாய்ஸ் எஸ்.டி.வி மூலம் வழங்கப்படும் நன்மைகளை பற்றி பேசுகையில், வீட்டு வட்டத்தில் உள்ள எந்தவொரு நெட்வர்க் உடனாகவும் வரம்பற்ற குரல் அழைப்புகளை மற்றும் , இது மும்பை மற்றும் தில்லி தவிர இதர அனைத்து வட்டத்திலும் தேசிய ரோமிங் அழைப்புகளையும் வழங்குகிறது.

பான்-இந்தியா அடிப்படையில்

பான்-இந்தியா அடிப்படையில்

மறுகையில் உள்ள ரூ.319/- ஆனது ரூ.99/0 வழங்கும் அதே சலுகைகளை அளிக்கிறது. ஆனால் ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். பான்-இந்தியா அடிப்படையில் இந்த திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்வதற்காக பிஎஸ்என்எல்-ன் வலைத்தளத்தை அணுகவும்.

28 நாட்கள் கூட இல்லை

28 நாட்கள் கூட இல்லை

துரதிருஷ்டவசமாக, ரூ.99/- திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வெறும் 26 நாட்கள் மட்டுமே, பிற ப்ரீபெய்டு எஸ்டிவிக்களை போன்று 28 நாட்கள் கூட இல்லை. எனவே, ஒரு வருடத்திற்கு, இதே திட்டத்தை 1பயன்படுத்த மொத்தம் 14 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தால் 13 முறை ரீசார்ஜ் செய்தால் போதும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
குரல் அழைப்பு பயனர்களுக்கு மட்டும்தான்

குரல் அழைப்பு பயனர்களுக்கு மட்டும்தான்

மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- ஆனது 28 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளையும், 2 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. ஆக இந்த பிஎஸ்என்எல் ரூ.99/- திட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு ஜிபி அளவிலான தரவாவது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிறுவனம் தெளிவாக, இவைகளை குரல் அழைப்பு பயனர்களுக்கு மட்டும்தான் என்று கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL’s New Rs 99 Prepaid Voice STV Plan Offers Unlimited Voice Calls to Any Network for 26 Days. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X