நம்பமுடியாத செல்லுபடி; நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டா; பிஎஸ்என்எல் அதிரடி!
பிஎஸ்என்எல் திட்டமான ரூ.485/- ஆனது மும்பை மற்றும் டெல்லி வட்டாரஙகளை தவிர இதர அனைத்து வீட்டு வட்டாரங்களுக்குமான "அன்லிமிடெட்" வாய்ஸ் நன்மையை வழங்குகிறது
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் பயனர்களுக்கு ரூ.551/- என்கிற ப்ரீபெய்ட் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரூ.551/- திட்டமானது ஒரு டேட்டா நன்மையை மையமாக கொண்ட ஒரு திட்டமாகும். ஏனெனில் இது எந்தவிதமான வாய்ஸ் நன்மைகளையும் வழங்கவில்லை.

எனினும், இதன் டேட்டா நன்மை மற்றும் செல்லுபடியாகும் காலம், சற்று சிறப்பாக உள்ளதால் ரூ.551/- ஐ கவனத்தில் கொள்ள முடிகிறது. உடன் இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் வாரியிலாக இலவச பிஎஸ்என்எல் காலர் ட்யூன் நன்மை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.551/- நன்மைகள்
இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ.551/- ப்ரீபெய்ட் திட்டமானது, ரிச்சார்ஜ் செய்த தேதியிலிருந்து 90 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மொத்தத்தில், 135 ஜிபி டேட்டா கிடைக்கும். நாள் தோறும் கிடைக்கும் 1.5 ஜிபி என்கிற அளவிலான டேட்டா தீர்ந்த பின்னர், ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களில் உள்ள பாணியை போன்றே - இன்டர்நெட் வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும். அதாவது 1.5ஜிபி டேட்டா என்கிற தினசரி வரம்பிற்கு பின்பும் கூட பயனர்களால் டேட்டாவை அனுபவிக்க முடியும் என்று அர்த்தம்.

பிஎஸ்என்எல் ரூ.444, ரூ.485 மற்றும் ரூ.666
இந்த ரூ.551 ப்ரீபெய்ட் திட்டத்துடன், பிஎஸ்என்எல் ரூ.444, ரூ.485 மற்றும் ரூ.666/- ஆகிய திட்டங்களும் அறிமுகமாகியுள்ளது. ரூ.551-ஐ தவிர்த்து இதர மூன்று திட்டங்கள் ஏற்கனவே பிற வட்டாரங்களில் கிடைக்கின்றன. ஆனால் ரூ.551/- தற்போது வரையிலாக கேரள வட்டாரத்தில் உள்ள பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. வேறு எந்த வட்டாரத்திலும் கிடைக்கப்பெறவில்லை. கிடைக்குமா என்பது சார்ந்த வார்த்தைகளும் இல்லை.

பிஎஸ்என்எல் ரூ.444/- நன்மைகள்
நன்மைகளை பொறுத்தமட்டில் ரூ.444/- ப்ரீபெய்ட் திட்டமானது மும்பை மற்றும் டெல்லி வட்டாரஙகளை தவிர இதர அனைத்து வட்டாரங்களுக்கும் "அன்லிமிடெட்" வாய்ஸ் நன்மைகளை வழங்குகிறது. பிற நெட்வொர்க்குகளுக்கு நாள் ஒன்றுக்கு 200 நிமிடங்கள் என்று அழைப்புகள் வரையறுக்கப்பட்டு உள்ளது. இதை மீறும் பட்சத்தில் நிமிடத்திற்கு 20 பைசாக்கள் வசூலிக்கப்படும். மொத்தம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமும் ரூ.551/-ஐ போன்றே, ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா, இலவச காலர் ட்யூன் நன்மை மற்றும் தினசரி டேட்டா வரம்பிற்கு பின்னர் 80 கேபிபிஎஸ் வேகத்திலான அன்லிமிடெட் டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.485/- நன்மைகள்
பட்டியலில் அடுத்து உள்ள பிஎஸ்என்எல் திட்டமான ரூ.485/- ஆனது மும்பை மற்றும் டெல்லி வட்டாரஙகளை தவிர இதர அனைத்து வீட்டு வட்டாரங்களுக்குமான "அன்லிமிடெட்" வாய்ஸ் நன்மையை வழங்குகிறது. பிற நெட்வொர்க்குகளுக்கு நிகழும் அழைப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு 200 நிமிடங்கள் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது நாள் ஒற்ற்கு 100 எஸ்எம்எஸ்கள், ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, இலவச காலர் ட்யூன் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.


பிஎஸ்என்எல் சிக்ஸர் 666/- நன்மைகள்
கடைசியாக உள்ள, பிஎஸ்என்எல் சிக்ஸர் 666 திட்டமானது, நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா, ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ், செல்லுபடியாகும் 129 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.மேலும் பல தொலைத்தொடர்பு துறை சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications