பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா?
அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்காக, நீண்டகால செல்லுபடியாகும் புதிய ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டம் ரூ.997, தினசரி 3 ஜிபி 2 ஜி / 3 ஜி / 4 ஜி டேட்டாவை வழங்குகிறது. FUP அளவை அடைந்த பிறகு வேகம் 80kbps ஆக குறைக்கப்படும் என்றும், இந்த பிஎஸ்என்எல் திட்டத்துடன் இரண்டு மாதங்களுக்கு பர்சனலைஸ்ட் ரிங்பேக் டோன் (பிஆர்பிடி) நன்மையையும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து நெட்வொர்க்கு குரல் அழைப்புகளுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை வழங்குகிறது. குறிப்பாக ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் FUP உடன் இது மும்பை மற்றும் டெல்லி வட்டங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது.

இது தவிர, தினசரி டேட்டா சேவை மற்றும் தினசரி வழங்கப்படும் 250 நிமிட குரல் அழைப்பு சேவையுடன், இந்தத் திட்டம் செல்லுபடியாகும் முழு காலத்திற்கும்,தினமும் மொத்தமாக 100 எஸ்எம்எஸ்-களையும் பிஎஸ்என்எல்
வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ப்ரீபெய்ட் திட்டம் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கிறது, மேலும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் நவம்பர் 10 முதல் கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. நீண்டகால திட்டத்தைத் தேர்வு செய்ய விரும்பும் பயனர்கள் இத்திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications