Home
News

பிஎஸ்என்எல்-ன் 'ஹேப்பி ஆபர்' அறிமுகம்: 90 நாட்களுக்கு மொத்தம் 135ஜிபி.!

ரூ.186/- வவுச்சர் திட்டத்தையும், ரூ.187/- என்கிற ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டத்தையும் தேர்ந்தெடுக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா நன்மை கிடைக்கும்.

By Muthuraj

அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத் தொடர்பு இயக்குனரான பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited), அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மொபைல் தரவுத் திட்டங்களில் 43% என்கிற அளவிற்கு அதிக செல்லுபடியாகும் காலமும் என்றும் 50% வஎன்கிற அளவில் தரவு நன்மைகளையும் அதிகரிப்பதாக கடந்த வாரம் அறிவித்தது

பிஎஸ்என்எல்-ன் 'ஹேப்பி ஆபர்' அறிமுகம்: 90 நாட்களுக்கு மொத்தம் 135ஜிபி!

அதனை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனமானது, அதன் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 'ஹேப்பி ஆஃபர்' என்கிற பெயரின் கீழ் கூடுதல் நன்மைகளை அறிவித்துள்ளது. அதாவது தரவுத் திட்டங்களில் அதே 43% என்கிற அளவிற்கான அதிக செல்லுபடியையும், 50% கூடுதல் டேட்டாவையும் அறிவித்துள்ளது.

நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி

நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி

இந்த புதிய ஹேப்பி ஆபர் திட்டத்தின் கீழ், ரூ.485/- என்கிற ப்ரீபெயிட் பிஎஸ்என்எல் திட்டமானது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம், வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு உட்பட நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

மொத்தம் 129 நாட்களுக்கு செல்லுபடி

மொத்தம் 129 நாட்களுக்கு செல்லுபடி

மற்றொரு ப்ரீபெயிட் பிஎஸ்என்எல் திட்டமான ரூ.666/- ஆனது, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு உட்பட நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 129 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

நாள் ஒன்றிற்கு 1ஜிபி

நாள் ஒன்றிற்கு 1ஜிபி

ரூ.186/- வவுச்சர் திட்டத்தையும், ரூ.187/- என்கிற ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டத்தையும் தேர்ந்தெடுக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா நன்மை கிடைக்கும்.

81 நாட்கள் செல்லுபடி

81 நாட்கள் செல்லுபடி

இதேபோல பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.349/- மற்றும் ரூ.429/- என்கிற திட்டங்கள் முறையே 54 நாட்கள் மற்றும் 81 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டங்கள் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் நன்மையையும் வழங்கும்.

1 ஜிபி மற்றும் 1.5ஜிபி அளவிலான டேட்டா

1 ஜிபி மற்றும் 1.5ஜிபி அளவிலான டேட்டா

போட்டிநிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது மாதாந்திர திட்டங்கள் அனைத்திலும் ரூ.50/- என்கிற விலைக்குறைப்பை நிகழ்த்தியதும், இதன்கீழ் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி மற்றும் 1.5ஜிபி அளவிலான டேட்டா மற்றும் இதர ஜியோ நன்மைகளை அனுபவிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL’s new ‘Happy Offer’: 1.5GB per day data with 90 days validity for Rs 485. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X