ஏர்டெல், ஐடியா, வோடாபோனை விட 50% கூடுதல் டேட்டா; பிஎஸ்என்எல் ரூ.399/- அறிமுகம்.!
அப்படியென்ன நன்மைகள்.? இதன் செல்லுபடி காலம் என்ன.? எந்தெந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல் ரூ.399/- போட்டியிடும்.? என்பதை விரிவாக காண்போம்.
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் புதிய போஸ்ட்பெயிட் திட்டமான ரூ.399/- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய சுவாரஸ்யம் என்னவெனில் இந்த புதிய ரூ.399/- திட்டமானது, பிற டெலிகாம் ஆபரேட்டர்கள் வழங்கும் திட்டங்களை விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது.
அப்படியென்ன நன்மைகள்.? இதன் செல்லுபடி காலம் என்ன.? எந்தெந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல் ரூ.399/- போட்டியிடும்.? என்பதை விரிவாக காண்போம்.

50% சிறந்த நன்மையை வழங்கும்.!
இதர டெலிகாம் நிறுவனங்களின் தரவு நன்மையை விட 50% சிறந்த நன்மையை வழங்கும் ரூ.399 பிஎஸ்என்எல் போஸ்ட்பாய்ட் திட்டமானது 'கர் வாஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மார்ச் 1 முதல் அமலுக்கு வருகிறது.!
இது 2018 மார்ச் 1 முதல் அமலுக்கு வருகிறது என்பதும், பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் இதேபோன்ற விலையுள்ள திட்டங்களை வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

30ஜிபி
பிஎஸ்என்எல் ரூ.399/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில், இது எந்த வரம்பும் இல்லாத அழைப்பு நன்மைகளுடன் சேர்த்து அதன் பில்லிங் சுழற்சி காலத்திற்கு மொத்தம் 30ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது.

50% அதிகமாகும்.!
துரதிருஷ்டவசமாக, இந்தத் திட்டம் எஸ்எம்எஸ் பலன்களை வழங்கவில்லை, இதுவொரு பின்னடைவாக இருப்பினும் கூட இந்த ரூ.399 திட்டமானது இதர தனியார் தொலைதொடர்புகள் வழங்கும் டேட்டா நன்மையானது 50% அதிகமாகும்.

ஏர்டெல்
இந்த திட்டமானது இது எந்த ரோமிங் அழைப்பு நன்மைகளையும் வழங்காது என்பது மற்றொரு பின்னடைவு ஆகும். மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் ரூ.399/- ஆனது மொத்தம் 20 ஜிபி தரவு, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் பில்லிங் சுழற்சி காலம் வரை ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

வோடபோன்
வோடபோன் இந்தியாவின் ரூ.399/- ஆனது ஒரு ரெட் பேஸிக் திட்டமாகும். இது வெளிச்செல்லும் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் மொத்தம் 20 ஜிபி அளவிலான தரவு ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

ஐடியா
ஐடியா செல்லுலாரின் ரூ.389/- என்கிற நிர்வாணா பட்ஜெட் திட்டமானது - சமீபத்தில் திருத்தப்பட்டு - தற்போது மொத்தம் 20 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


குறைந்தபட்சம்.!?
பிஎஸ்என்எல் ரூ.399/- திட்டத்துடன் குறைந்தபட்சம் எஸ்எம்எஸ் நன்மைகளாவது சேர்க்கப்பட்டால் இதர நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்குமொரு முதன்மை திட்டமான இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications