Home
News

BSNL வழங்கும் ஜாக்பாட் திட்டம் வெறும் ரூ.397 விலையில் 150 நாள் வேலிடிட்டி! எப்படி ரீசார்ஜ் செய்யணும்!

அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் BSNL அறிமுகம் செய்துள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டம் தான் ரூ.397 திட்டம். இது மிகவும் குறைந்த விலையில் 150 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இதன் நன்மை என்ன? வாங்க பார்க்கலாம்.

யாராக இருந்தாலும், குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி கிடைக்கும் திட்டத்தை தான் தேர்வு செய்ய நினைப்பார்கள். அந்த வகையில், நமக்கு கிடைத்திருக்கும் பெஸ்ட் திட்டம் தான் BSNL ரூ. 397 ப்ரீபெய்ட் திட்டம். இது மிக சிறந்த நன்மைகளை வழங்குகிறது. ஏர்டெல் மற்றும் ஜியோவைத் தவிர, குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி திட்டத்தை வழங்கும் நிறுவனமாக BSNL திகழ்கிறது.

BSNL வழங்கும் ஜாக்பாட் திட்டம் வெறும் ரூ.397 விலையில் 150 நாள் நன்மை!

BSNL PV_397 ரீச்சார்ஜ் திட்டம்:

இந்த BSNL PV_397 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது மற்ற நெட்வொர்க்கை விட அதிகமான வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு மொத்தமாக 150 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இதில், பயனர்களுக்கு அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களையும் செய்யலாம்.

இத்துடன் அன்லிமிடெட் காலிங் வசதியும் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா உடன் அதிவேகத்தில் வழங்கப்படுகிறது. இது FUP வரம்பிற்கு பிறகு இந்த திட்டம் 40Kbps ஆகக் குறைக்கப்படும். இது தவிர, தினமும் இந்த திட்டம் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன், இலவச மியூசிக் சேவை உள்ளடக்கமும் வழங்கப்படுகிறது.

BSNL வழங்கும் ஜாக்பாட் திட்டம் வெறும் ரூ.397 விலையில் 150 நாள் நன்மை!

BSNL vs Jio ரீசார்ஜ் திட்டம்!

BSNL மட்டுமே இத்தகைய நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் போன்ற ஒரு திட்டத்தை மற்ற எந்த நிறுவனமும் வழங்கவில்லை. இருப்பினும், இந்த திட்டத்திற்கு மிக நெருக்கமான விலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் சில திட்டங்களை வழங்குகின்றன. BSNL இன் இந்த திட்டத்திற்கு நிகராக மற்ற நெட்வொர்க் என்ன வழங்குகிறது என்று பார்க்கலாம்.

ஜியோ நிறுவனம் ரூ.395 விலையில் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இதில், வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் 1000 எஸ்எம்எஸ்கள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதனுடன் 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் வழங்கப்படுகிறது. BSNL உடன் ஒப்பிடுகையில் இது 66 நாள் வேலிடிட்டி குறைவாக வருகிறது.

BSNL வழங்கும் ஜாக்பாட் திட்டம் வெறும் ரூ.397 விலையில் 150 நாள் நன்மை!

BSNL vs Airtel ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்!

ஏர்டெல் பற்றி பேசுகையில், இந்த விலையில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. ஆனால், நிறுவனம் ரூ. 455 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசுகையில், இந்த திட்டம் 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர சில சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமும் 66 நாள் குறைவான வேலிடிட்டி உடன் வருகிறது.

BSNL நிறுவனத்தின் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம், BSNL இன் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் இருந்து ரீசார்ஜ் செய்யலாம். அல்லது BSNL மொபைல் வழியாக இது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL's Jackpot plan at just Rs.397 with 150 days validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X