ஒரே ரீசார்ஜ், ஆனால் 3 மொபைல்களுக்கு 1ஜிபி/நாள் கனெக்ஷன்; அசத்தும் பிஎஸ்என்எல்.!

சிறப்பான மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதில் பிஎஸ்என்எல்-ஐ அடித்துக்கொள்ள முடியாது என்பதற்கு பல திட்டங்களை எடுத்துக்காட்டாக கூறலாம்.

|

மலிவான விலையில் அதிவேக டேட்டாவை வழங்கும் ஜியோவின் வருகைக்கு பின்னரும் கூட, அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் எப்படி தன்னை சந்தையில் தக்கவைத்துக் கொள்கிறது என்று கேட்டால் - அதன் மொபைல் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளின் மீதான பயனர்களின் நம்பிக்கையை சுட்டிக்காட்டலாம்.

ஒரே ரீசார்ஜ், ஆனால் 3 மொபைல்களுக்கு 1ஜிபி/நாள் கனெக்ஷன்; BSNL அதிரடி.!

சிறப்பான மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதில் பிஎஸ்என்எல்-ஐ அடித்துக்கொள்ள முடியாது என்பதற்கு பல திட்டங்களை எடுத்துக்காட்டாக கூறலாம். அந்த பட்டியலில் மேலுமொரு பேமிலி திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. அதென்ன திட்டம்.? அதன் நன்மைகள் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.!

பிஎஸ்என்எல் பேமிலி பிளான்.!

பிஎஸ்என்எல் பேமிலி பிளான்.!

நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையான ரூ.1199/- ஆனது, தற்போது பிஎஸ்என்எல் குடும்பத் திட்டமாக (BSNL Family Plan) மறுபெயரிடப்பட்டுள்ளது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது பிராட்பேண்ட் மற்றும் மொபைல் இணைப்புகளை வழங்கும் ஒரு திட்டமாகும். அதாவது, பிஎஸ்என்எல்-ன் தொலைதொடர்பு மற்றும் கம்பி வலைப்பின்னல் பிராட்பேண்ட்டை கொண்டு சேவைகளை வழங்கும்.

30 ஜிபி டேட்டா.!

30 ஜிபி டேட்டா.!

நாடு முழுவதும் செல்லுபடியாகும் இந்த திட்டமானது, 10 Mbps வேகத்திலான பிராட்பேண்ட் இணைப்புகளை வழங்குகிறது. இந்த பேமிலி பேக் திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டாவின் வரம்பு, 30 ஜிபி ஆகும். இந்த பிராட்பேண்ட் இணைப்பின் மேல், மூன்று பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் இணைப்புகளை ஒன்றிணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் மூன்று மொபைல்களில் பயன்படுத்த முடியும்.

10 Mbps வேகத்தின் கீழ்.!

10 Mbps வேகத்தின் கீழ்.!

இன்னும் விரிவானக பேசினால், ரூ.1199/- திட்டமானது மொத்தம் 30 ஜிபி அளவிலான டேட்டாவை, 10 Mbps வேகத்தின் கீழ் வழங்கும் மற்றும் இதன் பதிவிறக்க வேகத்தை பொறுத்தவரை 2 Mbps ஆகும். இந்தத் திட்டத்தை ரீசார்ஜ் செய்த பின்னர், இலவச மொபைல் சேவைகளை அணுக விரும்பும் மூன்று பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் எண்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

வரம்பற்ற வாய்ஸ் மற்றும் 1 ஜிபி.!

வரம்பற்ற வாய்ஸ் மற்றும் 1 ஜிபி.!

தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு எண்ணும் ஒரு நாளைக்கு ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் 1 ஜிபி தரவு போன்ற நன்மைகளை பெறும். 1ஜிபி டேட்டாவை பொறுத்தவரை, 40 Kbps என்கிற வேகம் கிடைக்கும். முன்னதாக, இதே திட்டத்தின்கீழ் ஒரு மொபைல் எண்ணுக்கு 1 ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்பட்டதும், தற்போது அது மொத்தமாகவே 1ஜிபி டேட்டா தான் என்று குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்எம்எஸ் நன்மை.?

எஸ்எம்எஸ் நன்மை.?

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு எந்த எஸ்எம்எஸ் நன்மையையும் கிடைக்காது. பதிலாக, இந்த திட்டத்துடன் சேர்த்து பிஎஸ்என்எல் ட்யூன் இலவசமாக கிடைக்கும். ஆனால் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் நெட்வொர்க்கில் குரல் அழைப்புகள் இலவசம் இல்லை. அவைகள் நிறுவனத்தின் தரமதிப்பீட்டு கட்டணங்களின் கீழ் தான் அணுக கிடைக்கும். பிஎஸ்என்எல் பல இலவச வாய்ஸ் நன்மைகளை வழங்கும் திட்டங்களை நாட்டில் கொண்டுள்ள காரணத்தினால் தான், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Best Mobiles in India

English summary
BSNL’s Economic Family Plan Now Provides 1GB Data Per Day for Three Mobiles. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X