பிஎஸ்என்எல் நெட்வொர்க்கே கிடைப்பதில்லை.! 85ஆயிரம் ஊழியர்களை நீக்கப்போவதாக எம்.பி அறிவிப்பு.!

|

கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் உத்தர கன்னடா என்ற மாவட்டத்தில் பாஜக கட்சி நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாடளுமன்ற உறுப்பினர், அனந்தகுமார் ஹெக்டா தெரிவித்தது என்வென்றால்,

 மட்டுமல்ல பெங்களூரு

உத்தர கன்னடாவில்ல மட்டுமல்ல பெங்களூரு மற்றும் டெல்லி வீடுகளில் கூட எனக்கு எப்போதும் பிஎஸ்என்எல் நெவொர்க் கிடைப்பதில்லை. குறிப்பாக இந்நிறுவனம் நாட்டின் களங்கமாக உள்ளது. இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர உள்ளோம்.

துரோகிகளின் கூடாரமாக

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள பல்வேறு சிக்கலைத் தீர்க்க பாஜக அரசினால் கூட முடியவில்லை,தேசத் துரோகிகளின் கூடாரமாக பிஎஸ்என்எல் மாறிவிட்டது என்று அனந்தகுமார் ஹெக்டா தெரிவித்தார்.

டெல் லேட்டிடியூட் 7410 க்ரோம்புக் மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.

நகரில் நடந்த கூட்டத்திலும்

இதைக் கார்வார் நகரில் நடந்த கூட்டத்திலும் தெளிவாக எடுத்துரைத்தேன். அரசாங்கம் உரிய நிதி ஒதுக்கியுள்ளது. மக்களிடம் தேவை இருக்கிறது,உள்கட்டமைப்பு வசதிகளும் இருந்தும் பிஎஸ்என்எல்லில் இருப்பவர்கள் சரியாக வேலை செய்வதில்லை எனவே தான் பிஎஸ்என்எல்லில் பணிபுரியும் 85,000ஊழியர்களை வேலையை விட்டு நீக்கவுள்ளோம்.

மேலும் அதிகரிக்கும்,

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும், பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் மயமாக்கப்படுவது உறுதி என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

எஸ்என்எல் தங்களது

அன்மையில் பிஎஸ்என்எல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த சில திட்டங்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. மேலும் சில கூடுதல் சலுகைகளையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

முழுவதும் பல திட்டங்களை

பிஎஸ்என்எல் தமிழகம் முழுவதும் பல திட்டங்களை திரும்பப் பெற்றுள்ளது. ஜூலை 31,2020 முதல் பதஞ்சலி திட்டங்கள் உட்பட பல வவுச்சர்களை திரும்பப் பெறுவதாக நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் 2018 ஆண்டின் நடுப்பகுதியில் பல பதஞ்சலி திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

பயனர்களுக்கு வரம்ப

இந்த திட்டங்களில் ரூ.144 திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற குரலழைப்புகள் மற்றும் 100 ஜிஎம்எஸ் உடனான 2 ஜிபி தரவை நிறுவனம் வழங்கியது. அதோடு ரூ.792 திட்டம் மற்றும் ரூ.1584 என இரண்டு திட்டங்களை 180 நாடகள் வேலிடிட்டி மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி செல்லுபடியை வழங்கியது. பதஞ்சலி திட்டத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து திட்ட வவுச்சர்களையும் சென்னை வட்ட பயனர்கள் ரீசார்ஜ் செய்ய அனுமதித்ததாக கூறப்பட்டது.

ரூ.349 வவுச்சர் மற்றும்

அதோடு ரூ.551 வவுச்சர், ரூ.349 வவுச்சர் மற்றும் ரூ.447 வவுச்சர்கள் என அனைத்தும் 2020 ஜூலை 31 ஆம் தேதியோடு திரும்பப் பெறுவதாக ஆபரேட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.551 டேட்டா திட்டத்தில் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 5 ஜிபி வரை 90 நாட்களுக்கு வழங்கியது. இந்த டேட்டாவானது 80 கேபிபிஎஸ் வேகத்தில் வழங்கியது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL’s 85,000 employees traitors, will be fired’: BJP’s Anantkumar Hegde: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X