அதிகமான டேட்டா நன்மை வேண்டுமா? பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் பெஸ்ட்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் பல அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ந்தியாவில் பிஎஸ்என்எல்

குறிப்பாக இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும்இப்போது நீண்ட நாள் வேலிடிட்டி உடன் அதிகமான டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது
பார்ப்போம்.

மூன்றில் ஒரு பங்காக குறையும் ஆப்ஸ் எண்ணிக்கை.. Google/Apple நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை.. என்ன காரணம்?மூன்றில் ஒரு பங்காக குறையும் ஆப்ஸ் எண்ணிக்கை.. Google/Apple நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை.. என்ன காரணம்?

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 100ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 100ஜிபி டேட்டாவைத் தாண்டி, பயனர்கள் 80 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை அணுக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். மேலும் இது இணையதளத்தில் 'டேட்டா வவுச்சரின்' கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது ஒரு நாளைக்கு 100 SMS உடன் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது. அதேபோல் இந்த ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தில் BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான சந்தாவையும் பெறலாம்.

மே 18 வரை காத்திருங்கள்: ரியல்மி நார்சோ 50 5ஜி, நார்சோ 50 ப்ரோ 5ஜி- உயர்தர அம்சம், பட்ஜெட் விலை!மே 18 வரை காத்திருங்கள்: ரியல்மி நார்சோ 50 5ஜி, நார்சோ 50 ப்ரோ 5ஜி- உயர்தர அம்சம், பட்ஜெட் விலை!

 பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 என்று அழைக்கப்படும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டம் எந்த OTT சந்தாவையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்

ஆப்பிள் எக்ஸ்டரா எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடி!ஆப்பிள் எக்ஸ்டரா எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடி!

 பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் ரூ.599 திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும் ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் கிடைக்கிறது. மேற்கூறிய நன்மைகளுடன், BSNL நிறுவனம் இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு தினமும் இரவில் வரம்பற்ற டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரூ.87 திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

ஏலியன்ஸ் இருக்கா? இது எப்படி வந்துச்சு?- செவ்வாய் கிரகத்தில் இருந்த கதவு வாசல்: நாசா ரோவர் எடுத்த புகைப்படம்!ஏலியன்ஸ் இருக்கா? இது எப்படி வந்துச்சு?- செவ்வாய் கிரகத்தில் இருந்த கதவு வாசல்: நாசா ரோவர் எடுத்த புகைப்படம்!

பிஎஸ்என்எல் ரூ 87 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள்

பிஎஸ்என்எல் ரூ 87 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள்

பிஎஸ்என்எல் அதன் ரூ.87 ப்ரீபெய்ட் திட்டத்தை மொத்தம் 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் தொகுக்கப்பட்ட அனைத்து இலவசங்களும் பயனர்களுக்கு முழுமையான 14 நாட்களுக்குக் கிடைக்கும். ரூ.87 திட்டமானது தினசரி 1ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது மொத்தம் 14ஜிபி டேட்டாவை வெறும் ரூ. 87 விலையில் வழங்குகிறது. அதன் பிறகு டேட்டாவின் வேகம் 40 கேபிபிஎஸ் ஆகக் குறையும்.

என்னா மனுசன்யா., ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.3.87 லட்சம் போனஸ்- முதலாளி சொன்ன காரணம் இருக்கே அடடா!என்னா மனுசன்யா., ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.3.87 லட்சம் போனஸ்- முதலாளி சொன்ன காரணம் இருக்கே அடடா!

அவரவர்

மேலும், இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு தினமும் 100 SMS மற்றும் இலவச வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. இறுதியாக, இந்த திட்டம் ரூ.100க்கு கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களில் இதுவரை கிடைக்காத SMS நன்மையை இப்போது அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. BSNL அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டம் நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் கிடைக்குமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. குறிப்பிட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பயனர்கள் BSNL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அவரவர் வட்டத்தில் இந்த திட்டம் கிடைக்கிறதா என்பதை சரிபார்க்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL 's 3 prepaid plans that offer the best data benefits: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X