BSNL பெரிய சம்பவம்.. வெறும் ரூ.999 போதும்.. 215 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. செய்கைனா இதுதான்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் கொடுக்க முடியாத சலுகையை மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுத்திருக்கிறது. வெறும் ரூ.999 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 215 நாட்கள் வேலிடிட்டி கொடுத்து, பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், மற்ற நிறுவனங்களின் கஸ்டமர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த மலிவு விலை வாய்ஸ் கால் திட்டத்தை (Chepest Voice Call Plan) பற்றி முழு விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.
தனியார் டெலிகாம் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு மத்திய தொலைத்தொடர்புத்துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிர் கிடைத்துவிட்டது. பிஎஸ்என்எல் சிம் கார்டுகளின் விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது. அதே நேரத்தில் பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை 4ஜிக்கு மாற்றும் பணிகளும் படு வேகமாக நடக்கின்றன.

ஆகவே, இப்போது பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களின் மீதே கஸ்டமர்களின் கவனம் இருக்கிறது. ஏனென்றால், பெரும்பாலான திட்டங்கள் மலிவான விலைக்கே கிடைப்பதால், அதில் எது பெஸ்ட் என்பதை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. இதில் வாய்ஸ் கால்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களை தேடுவோர்களுக்கு ரூ.999 திட்டம் பக்கா தேர்வாகும்.
பிஎஸ்என்எல் ரூ 999 திட்ட விவரங்கள் (BSNL Rs 999 Plan Details): மற்ற நிறுவனங்களில் வாய்ஸ் கால் சலுகையை பொறுத்தவரையில், டேட்டாவுடன் மட்டுமே திட்டங்கள் கிடைக்கின்றன. வெறும் வாய்ஸ் கால் சலுகையை கொடுத்தால், சிம் ஆக்டிவ் சலுகையும் கூடவே வந்துவிடுகிறது. இதனால் லாபம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, இதுபோன்ற திட்டங்களை மற்ற நிறுவனங்கள் தவிர்க்கின்றன.
ஆனால், பிஎஸ்என்எஸ் நிறுவனம் இதுபோன்ற திட்டங்களை வைத்திருக்கிறது. அதாவது, இந்த ரூ 999 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 215 நாட்களுக்கு வேலிடிட்டியை கொடுக்கிறது. ஆகவே, இந்த வேலிடிட்டி முழுவதும் சிம் ஆக்டிவ் சலுகையும் கிடைத்துவிடுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.
லோக்கல்ஸ எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை சலுகை இதற்கு பொருந்துகிறது. இதுபோக முதல் 2 மாதங்களுக்கான பிஆர்பிடி (PRBT) சலுகையையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இதுதவிர எஸ்எம்எஸ், டேட்டா போன்ற மற்ற எந்தவித சலுகையும் இந்த திட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. வாய்ஸ் கால் சலுகை மட்டுமே போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இது நல்ல தேர்வாகும்.
இதே விலையில் தினசரி டேட்டா சலுகையும் வேண்டுமானால், மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. ஆனால், 215 நாட்கள் வேலிடிட்டி கிடைக்காது. அதைவிட கம்மியாக 160 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், கூடுதலாக பல்வேறு சலுகைகளை இந்த திட்டம் கொண்டிருக்கிறது. இதன் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த மலிவு விலை திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போலல்லாமல், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. இதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகையை பெறலாம்.
அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையையும் இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த மூன்று சலுகைகளையும் 160 நாட்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஹார்டி கேம்ஸ், அரினா கேம்ஸ், கேமியம், கேமியம் ஆஸ்ட்ரோடெல், ஜிங்க் மியூசிக், பிஎஸ்என்எல் டியூன்ஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








