SIM கார்டு கதை முடிஞ்சது.. சிம் இல்லாமல் 5G வருது.. 100Mbps ஸ்பீட் டேட்டா.. Jio, Airtel-க்கு சவால் விட்ட BSNL!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற பிரைவேட் டெலிகாம் நிறுவனங்களுக்கு நிகராக மட்டுமல்லாமல், அந்த நிறுவனங்களில் கிடைக்காதபடி சிம் கார்டு (SIM-less) இல்லாமலேயே 5ஜி சேவையை (5G Service) பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) களமிறக்கி இருக்கிறது. இருப்பினும், குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இந்த 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது. இந்த பிஎஸ்என்எல் 5ஜி திட்டங்களின் (BSNL 5G Plan) விவரங்கள் மற்றும் எங்கெங்கு கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிக்சடு வயர்லெஸ் அக்சஸ் சேவை:
இந்த பிஎஸ்என்எல் 5ஜி சேவையானது, எப்டபுள்யூஏ (FWA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிக்சடு வயர்லெஸ் அக்சஸ் (Fixed Wireless Access) மூலம் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இது வழக்கமாக கிடைக்கும் ஃபைபர் சேவையை போலல்லாமல், அதே வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கும். இது டைரெக்ட்-டூ-டிவைஸ் (Direct-to-Device) பிளாட்ஃபார்ம் அடிப்படையில் கிடைக்கிறது.

அதாவது, பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும் சிபிஈ (CBE) என்று சொல்லப்படும் கஸ்டமர் பிரிமைஸ் எக்யூப்மென்ட் (Customer Premise Equipment) மூலம் நேரடியாக டவர்களில் இருந்து டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதற்காக சிம் கார்டுகள் தேவையில்லை. கஸ்டமர் பிரிமைஸ் எக்யூப்மென்ட் மூலம் ஆட்டோ-ஆதன்டிக் செய்து, சேவையை பெற்று கொள்ளலாம்.
இதுபோன்ற சிம் கார்டுகள் இல்லாத 5ஜி சேவையானது, இந்தியாவில் முதல்முறையாகும். ஆகவே, இது தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாகவும் இருக்கிறது. இந்த பிஎஸ்என்எல் குவாண்டம் 5ஜி எப்டபுள்யூஏ (BSNL Quantum 5G FWA) சேவையானது முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் மட்டுமே உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பிஎஸ்என்எல் 5ஜி திட்டங்கள்:
100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கும் ரூ.999 திட்டம் மற்றும் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கும் ரூ.1,499 திட்டம் ஆகியவை மட்டுமே இப்போது கிடைக்கிறது. அதுவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்க இருக்கிறது. ஹைதராபாத் நகரத்தில் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு அடுத்து முக்கிய பகுதிகளில் தொடங்கப்பட இருக்கிறது.

பெங்களூரு, பாண்டிச்சேரி, விசாகப்பட்டினம், புனே, குவாலியர் மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளில் பைலட் முறையில் தொடங்கப்பட இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் மேற்கண்ட நகரங்களில் கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஹைதராபாத்தை பொறுத்தவரையில், 85 சதவீத பகுதிகளுக்கு 5ஜி சேவையை கொடுக்கும்படி டவர்கள் இருக்கின்றன.
பிஎஸ்என்எல் 5ஜி வேகம்:
இந்த பிஎஸ்என்எல் 5ஜி சேவை மூலம் அதிகபட்சமாக 980 எம்பிபிஎஸ் வேகத்தில் டவுன்லோட் ஸ்பீடு மற்றும் 140 எம்பிபிஎஸ் வேகத்தில் அப்லோட் ஸ்பீடு கிடைக்கிறது. சிம் கார்டு தேவையில்லை என்பதால், எளிதாக சேவையை பெறவும், பயன்படுத்தவும் முடிகிறது. அதேபோல பிக்சடு வயர்லெஸ் அக்சஸ் இருப்பதால் டேட்டா வேகம் குறைவதற்கு வாய்ப்புகள் கிடையாது.
இருப்பினும், தனியார் டெலிகாம் நிறுவனங்களை போல அதிக திட்டங்கள் இதில் இல்லை. 2 திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. இது பைலட் முறையில் இருப்பதால், இப்படி கிடைப்பது தெரிகிறது. ஆகவே, வரும் நாட்களில் பல்வேறு திட்டங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல இது ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை பயன்படுத்த முடியாது.
ஃபைபர் அல்லது பிராட்பேண்ட் போல வீட்டில் வைத்து பயன்படுத்தும்படி மட்டுமே சேவையை கொடுக்கும். ஆகவே, அதைவிட்டு வெளியேறினால், 5ஜி வேகத்தை பெற முடியாது. ஆனால், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களில் ஸ்மார்ட்போன்களுக்கும் 5ஜி சேவைகள் கிடைக்கிறது. ஆகவே, இதை ஏர்டெல், ஜியோவின் ஏர்ஃபைபர் திட்டங்களுடன் மட்டுமே ஒப்பிட்டு பார்க்க முடியும்.
ஜியோ நிறுவனத்தின் 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ஏர்ஃபைபர் திட்டத்தின் விலை ரூ.899ஆக இருக்கிறது. ஆனால், இதற்கு ஜிஎஸ்டி மற்றும் அட்வான்ஸ் கட்டணங்கள் இருக்கும். அதேபோல சிம் கார்டு மூலம் மட்டுமே புக்கிங் செய்ய முடியும். ஏர்டெல்லில் 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட திட்டம் ரூ.799 விலைக்கு வருகிறது. இதற்கும் ஜிஎஸ்டி, அட்வான்ஸ் மற்றும் சிம் தேவைப்படும்.


Click it and Unblock the Notifications








