BSNL-க்கு அடிடா சல்யூட்.. 1 குடும்பம்.. 1 ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 75GB டேட்டா.. மாதாந்திர வேலிடிட்டி!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு ஒரே ரீசார்ஜ் வழியாக 4 சிம் கார்டுகளுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகின்றன. பிரைமரி சிம் கார்டுகளுக்கு மட்டுமல்லாமல், அதே சலுகைகள் ஃபேமிலி சிம் கார்டுகளுக்கும் கிடைப்பதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திட்டம் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஒரு மாத வேலிடிட்டி கிடைக்கும். கூடுதலாக இணைக்கப்படும் ஃபேமிலி சிம் கார்டுகளுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது. அதேபோல வாய்ஸ் கால்கள் மட்டுமே ஃபேமிலி சிம் கார்டுகளுக்கு கிடைக்கும் என்று கவலைப்பட வேண்டாம். தனித்தனியாக சலுகைகள் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.999 திட்ட விவரங்கள் (BSNL Rs 999 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 75 ஜிபி டேட்டா மற்றும் 225 ஜிபிக்கு டேட்டா ரோலோவர் சலுகை கொடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிக்கு 1 பைசா வசூலிக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கும்.
லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இதேபோல ஃபேமிலி சிம் கார்டுகளுக்கும் கிடைக்கும். இந்த திட்டத்தில் 3 சிம் கார்டுகளை இணைத்து கொள்ளலாம். ஆகவே, பிரைமரி சிம் கார்டுடன் மொத்தமாக 4 சிம் கார்டுகளுக்கு வேலிடிட்டி கிடைக்கும். பிரைமரி சிம் கார்டுக்கு கிடைத்ததை போலவே ஃபேமிலி சிம் கார்டுகளுக்கும் சலுகை வருகிறது.
அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம், 75 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் சரியாக இருக்கும். இது ப்ரீபெய்ட் திட்டத்தைவிட மலிவாக கிடைக்கிறது.
1 சிம் கார்டுக்கு மட்டுமே சலுகை போதுமானால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்து வருகிற ரூ.199 திட்டத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு செல்லலாம். இதில் ஒரேவொரு சிம் கார்டுக்கு மட்டுமே சலுகை கிடைக்கும். ஆகவே, 75 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிக்கு 1 பைசா வசூலிக்கப்படும்.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. இதே ரூ.199 விலைக்கு ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கும் ஒரு திட்டம் கிடைக்கிறது. இந்த சலுகைகளை ஒப்பிட்டு பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.199 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இது போஸ்ட்பெய்ட் திட்டத்தைவிட குறைவாக இருக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. 28 நாட்களுக்கு மொத்தமாக 56 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆனால், போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 75 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கின்றன. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. ஆகவே, போஸ்ட்பெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகை கிடைப்பது தெரிகிறது. இருப்பினும், மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன ஒப்பிடுகையில் 2 திட்டங்களும் லாபம் தரக் கூடியதாகவே இருக்கின்றன.


Click it and Unblock the Notifications