Home
News

BSNL சூப்பர் அல்ட்ரா திட்டம்.. அடிமட்ட விலையில் 5000GB டேட்டா.. 200Mbps வேகம்.. எந்த திட்டம்? என்ன நன்மை?

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) டெலிகாம் (Telecom) நிறுவனம் இப்போது 5000GB டேட்டாவை (data) 200Mbps வேகத்தில் (Internet speed) வழங்கும் விலை மலிவான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தடையில்லாத ஸ்ட்ரீமிங் (streaming), கேமிங் (gaming) மற்றும் எண்ணற்ற டவுன்லோட் (unlimited download) போன்றவற்றை அனுபவிக்க BSNL இப்போது புதிய திட்டத்தை வெறும் ரூ. 1000 விலைக்குள் (BSNL plan under Rs 1000) அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன? இதன் கீழ் கிடைக்கும் சிறப்புக்கள் என்ன?

பிஎஸ்என்எல் நிறுவனம் வெறும் ரூ. 999 விலையில் புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் யாருமே நம்ப முடியாத விலையில், நம்பவே முடியாத நன்மைகளை வாரி வழங்கி அசத்தியுள்ளது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் IPL சீசன் கொண்டாட்டத்தை கோலாகலமாக கொண்டாட, அதன் வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு சூப்பர் அல்ட்ரா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

BSNL சூப்பர் அல்ட்ரா திட்டம்.. அடிமட்ட விலையில் 5000GB டேட்டா..

பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய பிராட்பேண்ட் திட்டம் ரூ. 999 விலையில் 5000GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை வழங்குகிறது. 1000 ரூபாய் விலைக்குள் கிடைப்பதனால், இந்த திட்டத்தின் டேட்டா ஸ்பீட் குறைவாக இருக்குமென்று தவறாக மட்டும் நினைத்துவிடாதீர்கள். இந்த BSNL Rs 999 Broadband Plan திட்டமானது 200 Mbps வேகத்தில் டேட்டா நன்மையை தடையின்றி வழங்குகிறது.

இந்தியாவில் இப்போது தினசரி IPL கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்படும் நேரத்தில், மக்களுக்கு கூடுதல் டேட்டா நன்மை தேவைப்படுகிறது. அதேபோல், OTT உள்ளடக்கங்கள் வழியாக திரைப்படங்கள், சீரிஸ்கள் மற்றும் பொழுதுபோக்கை அனுபவிக்க முன்பை விட இப்போது அதிக டேட்டா தேவைப்படுகிறது. இதனை புரிந்துகொண்ட BSNL நிறுவனம் இப்போது ரூ. 999 விலையில் புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தை புதிய BSNL பயனர்களும் மற்றும் ஏற்கனவே BSNL பிராட்பேண்ட் திட்டத்தை பயன்படுத்தும் BSNL பயனர்களும் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தை எளிமையாக பெற இப்போது உங்கள் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து 1800-4444 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மெசேஜ்ஜில் Hi என்று மட்டும் அனுப்பினால் போதும். அடுத்து உங்களை அழைப்பு மூலம் BSNL அதிகாரிகள் தொடர்பு கொண்டு புதிய இணைப்பிற்கான விபரங்களை பகிர்ந்துகொள்வார்கள்.

பயன்பாட்டில் உள்ள BSNL பிராட்பேண்ட் திட்ட பயனர்கள், இந்த திட்டத்திற்கு எளிமையாக அப்கிரேட் செய்துகொள்ளலாம். இந்த திட்டம் உங்களுக்கு விலை அதிகமான திட்டமாக தோன்றினால், நீங்கள் BSNL வழங்கும் பிஎஸ்என்எல் ரூ. 251 திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்த திட்டம் 251 ரூபாய் விலையில் 251GB டேட்டா நன்மையை அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்த திட்டத்தின் விலை மற்றும் டேட்டா நன்மையை வைத்து பார்க்கையில், வெறும் 1 ரூபாய் விலையில் 1GB டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை BSNL நிறுவனம் IPL ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக சமீபத்தில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு 5000GB டேட்டா வேண்டுமா? அல்லது 251GB டேட்டா போதுமா என்பதை நீங்களே முடிவு செய்து, உங்களுக்கான திட்டத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 999 Broadband Plan Offers 5000GB Data With 200 Mbps Speed Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X