அள்ளி தரும் 3 திட்டங்கள்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. பட்ஜெட் விலையில் அசத்தும் BSNL..
ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். சமீபத்தில் கூட இந்நிறுவனம் இரண்டு மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது.
அதாவது ரூ.58 மற்றும் ரூ.59 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் சமீபத்தில் அறிமுகம் செய்தது பிஎஸ்என்எல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். பிஎஸ்என்எல் நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் அதிக வேலிடிட்டி கொண்ட 3 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 997 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 160 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 320ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது.
அதாவது பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்ப நன்மைகளை வழங்குகிறது. மேலும் சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arena Games), லிஸ்டன் போட்காஸ்ட் (Lystn Podcast), வாவ் என்டர்டெயின்மென்ட் (WOW Entertainment), ஜிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunesஉள்ளிட்ட பல நன்மைகள் இதில் இருக்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 769 prepaid plan) மொத்தம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர பல்வேறு நன்மைகள் இதில் உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கும். மேலும் லோக்தூன் (Lokdhun) சப்ஸ்கிரிப்ஷன், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீஸ், ஹார்டி மொபைல் கேம் சேவை, ஜிங் உள்ளிட்ட பல பயன்பாட்டு நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 599 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT), ஆஸ்ட்ரோடெல் (Astrotell), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), வாவ் என்டர்டெயின்மென்ட் (WOW Entertainment), உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








