ஒரே ரீசார்ஜ்.. ஐந்து மாதங்களுக்கு கவலை இருக்காது.. தினமும் 2ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் BSNL.!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தின. ஆனால் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இதுவரை திட்டங்கள் விலையை உயர்த்தாமல் தொடர்ந்து மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் 4ஜி சேவையைக் கொண்டுவந்தது விட்டது.
கூடிய விரைவில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 160 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ஒரு அசத்தலான திட்டத்தை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 160 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தமாக 320ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் தினசரி இதில் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ரூ.997 திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) உள்ளிட்ட நன்மைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. குறிப்பாக பட்ஜெட் விலையில் அதிக சலுகைகள் வழங்குவதால் இந்த திட்டத்தில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் 50,000க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை நிறுவியுள்ளது. அவற்றில் 41,000க்கும் மேற்பட்டவை இப்போது செயல்பாட்டில் உள்ளன. குறிப்பாக 4ஜி சேவை இருக்கும் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வோல்ட்இ (VOLTE) சேவை வழங்கப்பட்டுள்ளது.

வோல்ட்இ சேவையைப் பயன்படுத்தித் தெளிவான வாய்ஸ் கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் பயனர்கள் 4ஜி மற்றும் 5ஜி சிம்மில் வோல்ட்இ சேவையை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைப் பார்க்கலாம். அதாவது நீங்கள் பிஎஸ்என்எல் 4ஜி அல்லது 5ஜி சிம் வைத்திருந்தால் 53733 என்ற எண்ணிற்கு 'ACTVOLTE'என்ற மெசேஜ் அனுப்பவும். இந்த மெசேஜ் வெற்றிகரமாக அனுப்பப்பட்டதும், VoLTE ஆனது உங்கள் மொபைலில் இயக்கப்படும்.
குறிப்பாக இந்த வோல்ட்இ ஆனது பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் 5ஜி சிம் கார்டுகளுடன் மட்டுமே இணக்கமானது. ஒருவேளை நீங்கள் பழைய 2ஜி அல்லது 3ஜி சிம் கார்டை பயன்படுத்தி வந்தால், அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் சென்று எந்த கட்டணமும் இல்லாமல் 4G அல்லது 5G மேம்படுத்திக்கொள்ளலாம். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான சேவைகளைக் கொண்டுவர உள்ளது.


Click it and Unblock the Notifications








