Home
News

BSNL இஸ் பேக்.. மாதந்தோறும் ரூ.199.. ஒரே ரீசார்ஜ் 160 நாட்களுக்கு ஓஹோன்னு நன்மைகள்.. டேட்டா, SMS, வாய்ஸ்!

நாடு முழுவதுமான 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை கொண்டிருக்கவில்லை என்றாலும் கூட, லாங் வேலிடிட்டி பிளான்கள் (Long Validity Plans) என்று வந்துவிட்டால்.. அதாவது நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்கள் என்று வந்துவிட்டால்.. அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமாம் தான் கில்லி!

அப்படியாக அடிக்கடி ரீசார்ஜ் செய்ய பிடிக்காத வாடிக்கையாளார்களுக்கான.. நீண்ட நாட்களுக்கு சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க விருப்பும் வாடிக்கையாளார்களுக்கான.. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மலிவான லாங் வேலிடிட்டி பிளான்களை தேடும் வாடிக்கையாளார்களுக்கான ஒரு திட்டத்தை பற்றித்தான் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.

BSNL: ஒரே ரீசார்ஜ் 160 நாட்களுக்கு ஓஹோன்னு நன்மைகள்!

அது ரூ.997 விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பிளான் ஆகும். இந்த திட்டம் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் என அனைத்து பொதுவான / வழக்கமான நன்மைகளையும் 160 நாட்கள் அல்லது 5 மாதங்களுக்கும் மேலான செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வழங்குகிறது. இதன் காரணமாகத்தான் இந்த ரீசார்ஜ் "தனித்து நிற்கிறது".

பெரும்பாலான திட்டங்கள் அதிகபட்சம் 84 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டியை வழங்கும் சூழ்நிலையில் பிஎஸ்என்எல்-ன் இந்த திட்டம் ரூ.997 க்கு 160 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்குகிறது. அதாவது 5 மாதங்கள் (அதாவது 10 நாட்களை கழித்துவிட்டு 150 நாட்கள்) என்று கணக்கிட்டால் கூட மாதந்தோறும் ரூ.199 என்கிற செலவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது செல்லுபடியாகும் முழு காலத்திற்கும் மொத்தம் 320 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்கும் தினசரி டேட்டா வரம்பை தாண்டிய பின்னர் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

இதோடு அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மையும் கிடைக்கும். கூடவே ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களும் அணுக கிடைக்கும். ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நிறைய சிக்கல்களை அளித்து வருகின்றன. இதுபோன்ற திட்டங்கள் "குறுகிய கால சலுகைகளுக்கு பதிலாக உண்மையான நீண்ட கால மதிப்பை வழங்கும் திட்டங்கள்" தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்பற்றி வருகின்றன.

பிஎஸ்என்எல் தொடர்பான 2 சமீபத்திய அப்டேட்களையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். பிஎஸ்என்எல் ஃபிளாஷ் சேலின் (BSNL Flash Sale) கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஸ்பெஷல் திட்டம் ஆன ரூ.400 ரீசார்ஜ் ஆனது ஜூலை 27 ஆம் தேதி வரை மட்டுமே ரீசாஜ் செய்ய கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது 40 நாட்களுக்கு செல்லுபடியாகும்; இந்த திட்டத்தின் கீழ் 400ஜிபி அளவிலான ஹை-ஸ்பீட் 4ஜி டேட்டா கிடைக்கும். அதாவது ரூ.1 க்கு 1ஜிபி டேட்டா என்கிற கணக்கின் கீழ் 400 ஜிபி கிடைக்கும்

இதேபோல பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ரூ.197 ரீசார்ஜ் திட்டத்தின் லிடிட்டி (Validity) மற்றும் நன்மைகளில் (Benefits) திருத்தங்களை செய்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, மலிவான விலையில் தத்தம் சிம் கார்டுகளை ஆக்டிவ் ஆக வைத்து இருக்க விரும்பும் பட்ஜெட் வாசிகள் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது.

ரூ.197 திட்டத்தின் பழைய வேலிடிட்டியை பொறுத்தவரை இது மொத்தம் 70 நாட்கள் செல்லுபடியாகும் படி இருந்தது. நன்மைகளை பொறுத்தவரை முதல் 15 நாட்களுக்கு இந்த திட்டம் டெய்லி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் காலிங் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்கியது.

ஆனால் திருத்தத்திற்கு பிறகு, இப்போது ரூ.197 திட்டமானது 4ஜிபி டேட்டா, 300 நிமிட வாய்ஸ் கால்கள் மற்றும் மொத்தம் 100 எஸ்எம்எஸ்கள் உடன் வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் மேற்குறிப்பிட்ட நன்மைகள் ஆனது 54 நாட்கள் முழுவதும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 997 Prepaid Plan Offers Daily 2GB Data SMS Voice For 160 Days Best SIM Active Recharge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X