ஒரே BSNL ரீசார்ஜ்.. 150 நாட்களுக்கு கவலை இல்லை.. கம்மி பட்ஜெட்.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவு தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் அதிக வேலிடிட்டி தரும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 150 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 300ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது
இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களில் 3 மாதம் வேலிடிட்டி மட்டுமே வழங்குகின்றன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் 150 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகளை வழங்கியது. இப்போது ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகைளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) ஆனது முன்பு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் 47 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே நீங்கள் இப்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 412 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட கூடுதல் வேலிடிட்டி சலுகை ஆனது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்நிறுவனம் 5ஜி சேவையை கூட அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications