Home
News

150 நாட்களுக்கு கவலை இருக்காது.. இந்த BSNL ரீசார்ஜ் பிளான் போதும்.. தினசரி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக தனியார் நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக நன்மைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ளதால் பலர் இதில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதுவும் இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. கூடிய விரைவில் அதாவது அடுத்த ஆண்டு இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையைக் கூட அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் 150 நாள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

150 நாட்களுக்கு கவலை இருக்காது.. இந்த BSNL ரீசார்ஜ் பிளான் போதும்..

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan) திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 150 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 300ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் ரூ.251 மற்றும் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுவந்தது. இப்போது இந்த இரண்டு மலிவு விலை திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 225 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 75ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம்.மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

150 நாட்களுக்கு கவலை இருக்காது.. இந்த BSNL ரீசார்ஜ் பிளான் போதும்..

பிஎஸ்என்எல் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.251 prepaid plan) ஆனது மொத்தமாக 100ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 100ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs.997 prepaid plan offers 150 days validity and unlimited calls: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X