இதுபோதுமே.. 150 நாட்களுக்கு ஒரே BSNL ரீசார்ஜ்.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதாவது தனியார் டெலிகாம் நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் தான் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. ஆனால் பிஎஸ்என்எல் இப்போதும் கம்மி விலையில் அதிக நன்மைகளை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.1000-க்கு கீழ் 150 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வைத்துள்ளது பிஎஸ்என்எல் இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan) திட்டம் தான் 150 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. ஆகவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 300ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
குறிப்பாக பிஎஸ்என்எல் வைத்துள்ள ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் போன்று ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களிடம் எந்தவொரு திட்டங்களும் இல்லை. அதாவது ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.1000-க்கு கீழ் 90 நாட்கள் மட்டுமே 84 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டங்களை மட்டுமே வழங்குகின்ற. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
ஒருவேளை பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தை விட கம்மி விலையில் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் தான் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை பயனுள்ள வகையில் இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்நிறுவனம் 5ஜி சேவையை கூட நாடு முழுவதும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








