Home
News

BSNL ஒரே போடு.. இனிமே 160 நாட்களுக்கு ஜமாய்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. ரீசார்ஜ் பிச்சிக்குது!

பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டு ஒன்னு வாங்கி வைக்கலாம் போலயே என்று மற்ற டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களே நினைக்கும்படி அந்த நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid Plan) சலுகைகள் கிடைக்கிறது. மற்ற நிறுவனங்கள் நினைத்து பார்க்க முடியாத விலைக்கு 160 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் சலுகைகளை இப்போது பிஎஸ்என்எல் கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan): பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு 5 மாதங்களுக்கு மேல் 10 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால், இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், இந்த திட்டத்துக்கு 160 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ்கள் வருகிறது.

BSNL ஒரே போடு.. இனிமே 160 நாட்களுக்கு ஜமாய்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

அதாவது, 160 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. இதுபோக நாள்தோறும் 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு உங்களுக்கு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.

ஆகவே, 160 நாட்கள் வேலிடிட்டிக்கு 320 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகைகளுக்கு பிறகு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. இந்த எஸ்எம்எஸ்களையும் நாளொன்றுக்கு அனுப்பி கொள்ளலாம். மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது.

இந்த திட்டத்தைவிட ரூ.502 விலை அதிகமாக மற்றொரு பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் லம்ப்ட-சம் டேட்டாவுடன் சலுகைகள் கிடைப்பதால், வேலிடிட்டி அப்படியே டபுளாக கிடைக்கிறது. அதாவது, 365 நாட்கள் முழுவதும் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் தினசரிக்கு கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 1499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1499 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முன்பே சொன்னது போல 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஒரு வருடம் முழுவதும் அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை இந்த திட்டத்தின் மூலம் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

அதேபோல 365 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் செய்ய கிடைக்கிறது. ஆனால், டேட்டா சலுகை அப்படி கிடையாது. ஒரு வருட முழுவதுக்கும் வெறும் 24 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். ஆகவே, கஸ்டமர்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது.

ஆனால், வாய்ஸ் கால்கள் மட்டும் போதும் என்றால், இதைவிட மலிவான விலைக்கு வருடாந்திர திட்டம் கிடைக்காது. அதேபோல முந்தைய திட்டத்தில் கிடைத்த போஸ்ட் டேட்டா சலுகை இந்த திட்டத்துக்கு பொருந்தாது. ஆகவே, 24 ஜிபி டேட்டாவுக்கு பிறகு கஸ்டமர்கள் பயன்படுத்தும் டேட்டாவுக்கு கட்டணங்கள் செலுத்த வேண்டி இருக்கிறது.

ஆகவே, மலிவான விலைக்கு கிட்டத்தட்ட 6 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமும், 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமும் பிஎஸ்என்எல்லில் மட்டுமே கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் எந்த திட்டம் உங்களது பட்ஜெட் மற்றும் தேவைக்களுக்கு இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதுபோன்ற செய்திகளுக்கு பின்தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 997 Prepaid Plan Offer 160 Days Validity Unlimited Voice Calls 2GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X