Home
News

BSNL SIM-க்கு கும்பிடு.. மாதம் ரூ.199 க்கு 150 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 300 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கொடுக்க தயங்கும் விலைக்கு திட்டங்களை வைத்துள்ளது. மாதத்துக்கு ரூ.199 செலவிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை 150 நாட்களுக்கு கொடுக்கிறது. இது அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படுகிறது.

தனியார் டெலிகாம் நிறுவனங்களிலும் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமானது, ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்ந்த பிறகு குறைக்கப்பட்டுவிட்டன. அப்படியே கிடைத்தாலும் விலையும் அதிகமாக இருக்கிறது. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.997 திட்டத்தில் 150 நாட்கள் வேலிடிட்டியை கொடுத்து, கஸ்டமர்களை தக்க வைத்துள்ளது.

BSNL SIM-க்கு கும்பிடு.. மாதம் ரூ.199 க்கு 150 நாட்கள் வேலிடிட்டி!

இந்த திட்டமானது, கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, 1 மாதத்துக்கு ஆகும் செலவை கணக்கிட்டால் ரூ.199 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது. இந்த விலையில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ.997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த விலைக்கு கிடைப்பதால், டேட்டா சலுகையில் எந்த மாற்றமும் இல்லை. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை 150 நாட்கள் வேலிடிட்டி முழுவதும், இந்த பிஎஸ்என்எல் ரூ.997 திட்டம் கொடுக்கிறது. 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவையும் கொடுத்து இருக்கிறது.

இதை 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். மேலும், 5 மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கஸ்டமர்களுக்கு கிடைக்கின்றன. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கொடுக்கப்படுகின்றன. இந்த 4 சலுகைகளை மட்டுமே இந்த பிஎஸ்என்எல் ரூ.997 திட்டம் கொடுத்துள்ளது.

இதே 2 ஜிபி டேட்டாவுடன் வருடம் முழுவதும் வேலிடிட்டி தேவைப்பட்டால், பிஎஸ்என்எஸ் ரூ.2,399 திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. முன்னதாக இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது 47 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், செப்டம்பர் 12ஆம் தேதி வரையில் புதிய ஆஃபரின் கீழ் 47 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 412 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கொடுக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பெறும்பட்சத்தில் வேலிடிட்டி முழுவதும் மொத்தமாக 824 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ள முடியும்.

இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்த முடியும். 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு அனுப்பி கொள்ள கொடுக்கப்படுகின்றன. இந்த விலைக்கு ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களிடம் திட்டங்கள் கிடையாது. அதேபோல தனியார் நிறுவனங்களில் கிடைக்கும் டேட்டா வேகமானது, பிஎஸ்என்எல்லில் எதிர்பார்க்க முடியாது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 997 Plan With Unlimited Voice Calls 300 GB Data 150 Days Validity Check Plan Voucher
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X