அடிச்சு தூக்கிய BSNL.. மாசம் ரூ.199-க்கு 160 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களில் கிடைக்காத விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), எஸ்எம்எஸ் (SMS), தினசரி டேட்டா (Daily Data) சலுகைகளுடன் பிஎஸ்என்எல் டியூன்ஸ், ஓடிடி சந்தா, கேமிங் சந்தா போன்ற கூடுதல் சலுகைகளை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுத்ததுள்ளது. மாதம் வெறும் ரூ.199 செலவில் 160 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால், அதிக லாபம் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்கள் இதோ.
கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு அடிமட்ட விலையில் பிஎஸ்என்எல் திட்டம் வேண்டுமானால், இந்த திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏனென்றால், முக்கிய சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகளை கொடுக்கிறது. இந்த திட்டத்தின் டேட்டா சலுகை போக 24 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கிறது. என்னென்ன சலுகைகள் இருக்கிறது?

பிஎஸ்என்எல் ரூ 997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) 160 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு சிம் கார்டு ஆக்டிவ் கிடைக்கும். இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஆகவே, 160 நாட்களுக்கு 320 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதுபோக 24 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும்.
அதாவது, 320 ஜிபி டேட்டா மற்றும் 24 ஜிபி டேட்டா என்று மொத்தமாக 344 ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல 2 ஜிபி டேட்டாவை அன்றைய நாளில் முழுவதும் பயன்படுத்திய பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டா சலுகையின்படி 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகையும் கிடைக்கிறது. இப்போது வாய்ஸ் கால்கள் சலுகைக்கு வருவோம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 100 எஸ்எம்எஸ்களை நாளொன்றுக்கு கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். ஆகவே, டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு எந்தவித குறையும் இந்த திட்டத்தில் இல்லையென்பது தெரிகிறது.
ஆனால், இந்த சலுகைகள் போக கூடுதலாக பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. அதாவது, மேற்கண்ட சலுகைகள் போக ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலன்ஜர் அரினா (Challenger Arena Games), கேம்ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell) மற்றும் கேமியம் (Gameium) ஆகிய கேமிங் பிரியர்களுக்கான சந்தாவை இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.
மேலும், பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) மற்றும் ஜிங்க் மியூசிக் (Zing Music) சலுகைகளும் கிடைக்கின்றன. அதேநேரத்தில் ஓடிடி பிரியர்களை தட்டித்தூக்க வாவ் எண்டர்டெயின்மெண்ட் (WOW Entertainment) சந்தா கொடுக்கப்பட்டுள்ளது. கூடவே லிஸ்ட்ன் பாட்காஸ்ட் (Lystn Podocast) சந்தாவையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும். இப்படி ஏராளமான சலுகைகள் இருக்கிறது.
இதேபோல பாதிக்குப்பாதி வேலிடிட்டி மற்றும் விலையில் மற்றொரு திட்டம் இதே போல சலுகைகளை கொடுக்கிறது. அதாவது, ரூ.485 மதிப்பிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்யதால், முந்தைய திட்டத்தை போலவே 2 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆனால், 80 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி வருகிறது. கேமிங், ஓடிடி போன்ற மற்ற சலுகைகள் கிடையாது.


Click it and Unblock the Notifications








