சொல்லி அடிச்ச BSNL.. மாதம் ரூ.199 போதும்.. 5 மாசத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2ஜிபி டேட்டா கிடைக்கும்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Airtel) கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி மாதத்துக்கு ரூ.200 கூட செலவில்லாமல், அதைவிட மலிவான விலைக்கு 160 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுத்து தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் அசல் விலை ரூ.997ஆக இருக்கிறது. இந்த விலைக்கு 160 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. அதாவது, 5 மாதங்களுக்கு மேல் 10 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, ஒரு மாதத்துக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால், ரூ.199 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, ரூ.200 கூட செலவில்லாமல் இந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் 160 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மலிவான விலையாக இருப்பதால், லம்ப்-சம் டேட்டா மட்டுமே கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். இதில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதுபோக 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவையும் பெற்று கொள்ளலாம்.
இந்த டேட்டா சலுகைகளுடன் மற்ற டெலிகாம் நிறுவனங்களில் ரூ.1,000 விலைக்குள் திட்டத்தை எதிர்பார்க்கவே முடியாது. இந்த டேட்டா சலுகை போக 5 மாதங்களுக்கு மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை கொடுத்துள்ளது. எஸ்எம்எஸ் சலுகைகளிலும் குறையில்லை.
அதாவது, 160 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தால், அந்த நாட்கள் முழுவதும் 100 எஸ்எம்எஸ்களை தினசரிக்கு அனுப்பி கொள்ளலாம். ஆகவே, 5 மாதங்களுக்கு மேல் 10 நாட்கள் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல 10 மாதங்களுக்கு மேல் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 1,999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1,999 Plan Details): இந்த பிஎஸ்என்எல் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அதிக டேட்டா சலுகையை கொடுக்கிறது. அதாவது, மற்ற நிறுவனங்களில் வெறும் வாய்ஸ் கால்களை மட்டுமே வருடம் முழுவதும் கொடுக்கும் திட்டங்கள் கிட்டத்தட்ட ரூ.2,000 விலைக்கு கிடைக்கின்றன.
ஆனால், அதே ரூ.2,000 விலைக்கு இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் தினசரி டேட்டாவுடன் சலுகைகளை பெற்று கொள்ளலாம். ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 330 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 495 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி நாட்களில் பயன்படுத்தி கொள்ள முடிகிறது.
இந்த டேட்டா சலுகை மட்டுமல்லாமல், தினசரி டேட்டா 1.5 ஜிபியை முழுவதும் பயன்படுத்தி பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. இந்த சலுகைகளுக்கு பிறகு மற்ற சலுகைகள் ஒரு மாதிரியாகவே கிடைக்கின்றன. ஆகவே, முந்தைய திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள்) கிடைக்கிறது.
தினமும் 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பி கொள்ள கிடைக்கிறது. இந்த 2 திட்டங்களும் 5 மாதங்கள் மற்றும் 10 மாதங்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு பக்காவாக இருக்கின்றன. இதில் தினசரி டேட்டா கிடைப்பது மற்ற நிறுவனங்களில் எதிர்பார்க்க முடியாத சலுகையாக இருக்கிறது. ஆகவே, உங்களது தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








