BSNL-க்கு வந்தா இனி இதுதான்.. ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்கள் எதிர்பார்க்காத அடிமட்ட சலுகை.. வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் எல்லா திட்டங்களுக்கும் மவுசு ஏற்பட்டுவிட்டது. தொடும் திட்டம் எல்லாம் அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. இப்போது, 160 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மலிவு விலை திட்டம் ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு அடிமட்ட விலையில் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், இதை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி (OTT), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) போன்ற சலுகைகளையும் வாரி வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ 997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Prepaid Plan) 2 ஜிபி டேட்டா சலுகை தினசரிக்கு கிடைக்கிறது. 160 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுவதால், மொத்தமாக 320 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டாவும் வருகிறது.
ஆகவே, 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் (National Roaming) வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுக்கு எந்தவித குறையும் இருக்காது.
இதுபோக வழக்கமாக கிடைக்கும் 100 எஸ்எம்எஸ் சலுகை வருகிறது. இதை தினசரிக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகளே விலையை விட கூடுதலாக இருக்கின்றன. ஆனால், இந்த திட்டத்தில் மேலும் சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலன்ஜர் அரினா (Challenger Arena Games) மற்றும் கேம்ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell) வருகிறது.
மேலும், கேமியம் (Gameium), லிஸ்ட்ன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் பிஎஸ்என்எல் டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது. இதுபோக வாவ் எண்டர்டெயின்மெண்ட் (WOW Entertainment) சந்தா கிடைக்கிறது. இதேபோல வருடம் முழுவதும் சலுகைகள் கொண்ட திட்டம் இருக்கிறதா? என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு அடுத்து வரும் திட்டம் பக்கா ஆப்ஷனாகும்.
பிஎஸ்என்எல் ரூ 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு ஒரு வருடத்துக்கும் மேலாக வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, 395 நாட்களுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். ஆகவே, முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.
அதேபோல 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. ஆகவே, அதிகப்படியான சலுகைகளை ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுபோக கூடுதல் சலுகைகளாக ஹார்டி கேம்ஸ், சேலன்ஜர் அரினா, கேம்ஆன் ஆஸ்ட்ரோடெல், கேமியம், லிஸ்ட்ன் பாட்காஸ்ட், ஜிங்க் மியூசிக், பிஎஸ்என்எல் டியூன்ஸ் மற்றும் வாவ் எண்டர்டெயின்மெண்ட் சந்தா கிடைக்கிறது. இந்த கூடுதல் சலுகைகளையும் 395 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். பெஸ்ட் வருடாந்திர திட்டம் இதுவாகும்.


Click it and Unblock the Notifications








