Home
News

மாஸ் காட்டும் BSNL.. யாருமே தர முடியாத விலை.. 160 நாளுக்கு டேட்டா, வாய்ஸ் எல்லாமே இருக்கு.. எந்த பிளான்?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது இந்திய மக்களின் நம்பிக்கையான நெட்வொர்க்காக மாறி வருகிறது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது இந்திய மக்கள் விரும்பும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை அதிக நன்மையுடன் வழங்கி அசத்தி வருகிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் அறிவித்த விலை ஏற்றத்திற்கு பிறகு, மக்கள் மலிவு விலை திட்டங்களை அதிக வேலிடிட்டி உடன் பெறுவதை தொடர்ந்து பிஎஸ்என்எல் பக்கம் மாறத்துவங்கிவிட்டனர்.

குறைந்த செலவில் அதிக வேலிடிட்டியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இப்பொது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஒரு நம்பகமான நிறுவனமாக திகழ்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது குறைந்த செலவில் அதிக வேலிடிட்டியை வழங்கும் மற்றொரு சிறப்பான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் இப்போது தினசரி டேட்டா (Daily Data) நன்மை, இலவச எஸ்எம்எஸ் (free SMS) நன்மை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Voice Calls) நன்மையை வழங்குகிறது.

மாஸ் காட்டும் BSNL.. யாருமே தர முடியாத விலை.. 160 நாளுக்கு எல்லாமே..

மாஸ் காட்டும் BSNL.. யாருமே தர முடியாத விலை.. 160 நாள் திட்டம் (BSNL 160 Days Validity Plan):
இது எந்த திட்டம்? இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் எவ்வளவு? இந்த திட்டத்தின் முழு நன்மைகள் என்னென்ன என்பதை தெளிவாக பார்க்கலாம். நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது (BSNL prepaid plan) பிஎஸ்என்எல் ரூ. 997 திட்டம் (BSNL Rs 997 Plan) என்ற பெயருடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளின் விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த புதிய BSNL Rs 997 Plan அதன் பயனர்களுக்கு, தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited Voice Calls) நன்மையுடன், இலவச நேஷனல் ரோமிங் (National Roaming) நன்மை போன்றவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் நீண்ட நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இது 160 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 997 திட்டம் (BSNL Rs 997 Plan):

5 மாதம் 10 நாள் வேலிடிட்டியை அசால்ட்டாக வெறும் ரூ. 997 விலையில் வழங்கி பிஎஸ்என்எல் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 160 நாட்களுக்கும் தினசரி 2GB டேட்டா என்று கணக்கிட்டால், இந்த திட்டம் மொத்தமாக உங்களுக்கு 320GB டேட்டாவை வழங்குகிறது. 160 நாட்களுக்கு உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM Card) ஆக்டிவ் நிலையில் வைப்பது மட்டுமின்றி, 160 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம், இப்போது இந்தியாவின் பல இடங்களில் அதன் 4ஜி நெட்வொர்க்கை விவிரிவுபடுத்தியுள்ளது. 4ஜி வட்டங்களில், இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் இருக்கும் பட்சத்தில், இந்த திட்டத்துடன் வழங்கப்படும் 2GB டேட்டாவை மக்கள் ஹை-ஸ்பீட் 4ஜி டேட்டாவாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இப்போது பல இடங்களில் பிஎஸ்என்எல் 4ஜி கிடைக்கிறது. குறிப்பாக கிராமகாபுரப் பகுதிகள், மற்றும் குக்கிராமங்களில் BSNL 4G கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 997 Plan With 160 Days Validity Provides 2GB Daily Data Unlimited Voice Calls and 100 SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X