BSNL சிம் இருக்கா? உடனே இந்த 160 நாள் பிளானை பாருங்க.. மக்கள் கவனத்தை இருக்கும் புது ப்ரீபெய்ட் திட்டம்..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது இந்தியாவில் 160 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு அடிமட்ட விலை கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த செலவில் 5 மாதம் + 10 நாள் வேலிடிட்டியை வாரி வழங்கும் இந்த சூப்பர் பட்ஜெட் பிரெண்ட்லி திட்டத்தை ரீசார்ஜ் செய்ய மக்கள் மிகுந்த ஆர்வம் காண்பித்துள்ளனர். இந்த திட்டத்தின் விலை என்ன? இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
மக்களின் நம்பிக்கையான நெட்வொர்க்காக மாறி வருகிறது BSNL நிறுவனம். ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் அறிவித்த விலை ஏற்றத்திற்கு பிறகு, மக்கள் மலிவு விலை திட்டங்களை அதிக வேலிடிட்டி உடன் பெறுவதை தொடர்ந்து பிஎஸ்என்எல் பக்கம் மாறத்துவங்கிவிட்டனர். இதனால், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது இந்திய மக்கள் விரும்பும் நெட்வொர்க்காக மாறியுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது குறைந்த செலவில் அதிக வேலிடிட்டியை வழங்கும் மற்றொரு சிறப்பான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் இப்போது தினசரி டேட்டா (Daily Data) நன்மை, இலவச எஸ்எம்எஸ் (free SMS) நன்மை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Voice Calls) நன்மையை வழங்குகிறது. இது எந்த திட்டம்? இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் எவ்வளவு?
பிஎஸ்என்எல் ரூ. 997 திட்டம் (BSNL Rs 997 Plan) என்ற பெயருடன் இந்த புதிய திட்டம் பிஎஸ்என்எல்-ன் அணைத்து வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. பிஎஸ்என்எல் வழங்கும் இந்த புதிய BSNL Rs 997 Plan அதன் பயனர்களுக்கு, தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited Voice Calls) நன்மையையும் வழங்குகிறது.
இது இலவச நேஷனல் ரோமிங் (National Roaming) நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டம் 160 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 160 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 160 நாட்கள் என்று கூறுகையில், இந்த திட்டம் முழுமையாக 5 மாதம் செல்லுபடியாகிறது. இத்துடன் கூடுதலாக 10 நாட்கள் வேலிடிட்டியை இணைந்து BSNL நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த 160 நாள் திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் டெலிகாம் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது. 160 நாட்களுக்கும் தினசரி 2GB டேட்டாவை இந்த திட்டம் வழங்குகிறது. 160 நாட்களுக்கு இந்த திட்டம் மொத்தமாக உங்களுக்கு 320GB டேட்டாவை வழங்குகிறது. 160 நாட்களுக்கு உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM Card) ஆக்டிவ் நிலையில் வைப்பது மட்டுமின்றி, 160 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளுக்கு ரூ. 6 என்ற கட்டணத்துடன் பயன்படுத்த கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications