BSNL போட்ட போடு.. ஒரே ரீசார்ஜ்-க்கு 160 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2GB டேட்டா.. வெறும் ரூ.997-க்கு வருது!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு டேட்டா வேகம் மட்டும்தான், குறையாக இருக்குமே தவிர வாய்ஸ் கால்கள், வேலிடிட்டி போன்ற மற்ற சலுகைகளில் ஒரு குறையும் இருக்காது. ஏனென்றால், வாய்ஸ் கால்கள் திட்டங்களை பொறுத்தவரையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தைவிட மலிவான விலைக்கு எந்த நிறுவனங்களும் கொடுக்கவில்லை. இப்போது, பார்க்கப்போகும் திட்டம் வாய்ஸ் கால்களுக்கு மட்டும் போதாமல், டேட்டாவுக்கும் சேர்த்தே அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. 5 மாதங்களுக்கு மேல் சிம் ஆக்டிவ், வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்யலாம்.
இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 160 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இது பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பெறும் கஸ்டமர்களுக்கும் பொருந்தும். ஆகவே, பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருந்தால், இதைவிட மலிவான விலைக்கு 5 மாத திட்டத்தை பெற முடியாது.

மற்ற பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு டேட்டா வேகம் குறைவாக கிடைத்தாலும், வாய்ஸ் கால்கள் சலுகையே போதுமானதாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஏனென்றால், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களில் 6 மாதங்களுக்கு கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் குறைவாகும். அதிலும் ரூ.1,000 விலைக்குள் திட்டங்கள் கிடையாது. ஆகவே, எப்படி பார்த்தாலும், பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு இது நல்ல திட்டமாகவே இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். மற்ற நிறுவனங்களில் தினசரி டேட்டா முடிந்த பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்கும். அதேபோல இந்த பிஎஸ்என்எல் திட்டத்துக்கும் போஸ்ட் டேட்டா சலுகை இருக்கிறது. ஆனால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே கிடைக்கும்.
மற்ற நிறுவனங்களில் 64 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கிறது. அதேபோல அவற்றில் அனைத்து சர்க்கிள்களிலும் 4ஜி சேவை மற்றும் 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. இந்த தினசரி டேட்டா சலுகையை போலவே தினசரி எஸ்எம்எஸ் சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடிகிறது. இது வழக்கமாக கிடைக்கும் 100 என்னும் கணக்கில் அனுப்பிக் கொள்ள கிடைக்கிறது. அடுத்தது வாய்ஸ் கால்கள் சலுகை இருக்கிறது.

இந்த திட்டத்துக்கு அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை (STD Voice Calls) செய்து கொள்ளலாம். இதில் நேஷனல் ரோமிங் கால்களும் (National Roaming Calls) கிடைக்கிறது. இந்த டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகைகளே இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு 180 நாட்கள் திட்டம் இருக்கிறது.
ஆனால், அது லம்ப்-சம் டேட்டா சலுகையுடன் கிடைக்கிறது. இருப்பினும், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் முந்தைய திட்டத்தில் கிடைத்தை போலவே இருக்கிறது. இது கிட்டத்தட்ட வாய்ஸ் ஒன்லி திட்டம் போலத்தான். ஆனால், கூடுதல் லம்ப்-சம் டேட்டா கொடுக்கும் திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ 897 ஆக இருக்கிறது. இது முந்தைய திட்டத்தை விட ரூ 100 மலிவாக இருக்கிறது.
ஆனால், 180 நாட்களுக்கு வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் முந்தைய திட்டத்தில் கிடைத்த அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை கொடுக்கிறது. இருப்பினும், 90 ஜிபி டேட்டா மட்டுமே இதற்கு கிடைக்கிறது. இதுவும் லம்ப்-சம் சலுகையில் வருகிறது. மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும், 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கும் பயன்படுத்த கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications