Home
News

இனி எங்கும் BSNL.. இவ்ளோ கம்மி விலைக்கு 5 மாதம் வேலிடிட்டி-ஆ.. டெய்லி 2GB டேட்டா, வாய்ஸ், SMS.. எந்த ரீசார்ஜ்?

ரூ.51 ரீசார்ஜை அறிமுகம் செய்து புது கஸ்டமர்களையும், 100 புது 4ஜி டவர்களுடன் கேரள கஸ்டமர்களையும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது.. தற்போது அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கம் வழியாக, மிகவும் குறைவான மாதாந்திர செலவில் 5 மாதங்களுக்கு வேலிடிட்டி வழங்கும் ஒரு திட்டத்தை தீவிரமாக விளம்பரம் செய்து வருகிறது.

அது ரூ.997 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 150 நாட்கள் ஆகும். அதாவது 5 மாதங்கள் ஆகும். ஆக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதற்கான மாதாந்திர செலவு ரூ.200 க்குள் வரும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 199 ரூபாய் 40 பைசா வரும்.

இனி எங்கும் BSNL.. இவ்ளோ கம்மி விலைக்கு 5 மாதம் வேலிடிட்டி-ஆ!

5 மாதங்களுக்கு ரூ.997-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்கும். ஆக இதன் கீழ் மொத்தம் 300ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். 2ஜிபி என்கிற டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர், இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40Kbps ஆக குறையும்.

டேட்டா நன்மையை தவிர்த்து ரூ.997-ன் கீழ் இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் இலவச பிஎஸ்என்எல் ட்யூன்கள் மற்றும் பிஆர்பிடி (PRBT) என்கிற பெர்சனல் ரிங் பேக் டோன் (Personal Ring Back Tone) ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தை யார் எல்லாம் நம்பி ரீசார்ஜ் செய்யலாம் அல்லது யார் எல்லாம் தேர்ந்தெடுக்க வேண்டும்?
1. அடிக்கடி 'ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்கள்: ஒவ்வொரு 28 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யும் சிரமத்தை தவிர்க்க விரும்புபவர்கள்.

2. மிதமான டேட்டா தேவைப்படும் பயனர்கள்: அதிக அளவில் சமூக ஊடகங்களை பார்ப்பதற்கும், வழக்கமான தினசரி ஸ்ட்ரீமிங்கிற்கும் இது மிகவும் ஏற்றது.
3. பட்ஜெட் வாசிகள் : ஒரு மொபைல் நம்பரை, குறைந்த விலைக்கு நீண்ட நாட்களுக்கு ஆக்டிவ ஆக வைக்க விரும்புபவர்கள் இதை நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

பிஎஸ்என்எல்-ன் 100 புதிய 4ஜி டவர்கள்: பிஎஸ்என்எல் நிறுவனமானது புதுசேர்ச்சியில் 100 புதிய 4ஜி டவர்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த 100 டவர்களும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிர்து. இந்த அறிவிப்பை பிஎஸ்என்எல் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (சிஎம்டி) ராபர்ட் ஜே ரவி வெளியிட்டார்.

இதோடு நுகர்வோருக்கான கட்டணங்களை உயர்த்தும் திட்டம் நிறுவனத்திற்கு இல்லை என்றும் பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. இலவச இண்டர்நேர்ட் டிவி (IPTV), தேசிய வைஃபை ரோமிங் மற்றும் ஃபைபர் இண்டர்நெட் ஆகியவற்றை உள்ளடக்கிய பிஎஸ்என்எல்-இன் புதிய சேவைகளும் அப்பகுதி பயனர்களுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த புதிய சேவைகளின் விரிவாக்கம், கடந்த மூன்று மாதங்களில் புதுச்சேரி பகுதியில் 20,000 புதிய இணைப்புகளை பெற பிஎஸ்என்எல்நிறுவனத்திற்கு உதவியுள்ளது என்றும் ராபர்ட் ஜே ரவி கூறி உள்ளார். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் பயனர்களின் மொத்த எண்ணிக்கை 75,000 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, ​​புதுச்சேரியில் பிஎஸ்என்எல்-இன் 130 டவர்ங்கள் உள்ளன. எதிர்காலத்தில் கூடுதலாக 100 டவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதால், இப்பகுதியில் இண்டர்நெட் இணைப்பு கணிசமாக மேம்படும். இது, எதிர்காலத்தில் அதிக 4ஜி பயனர்களையும், ஒருவேளை 5ஜி பயனர்களையும் சேர்ப்பதற்கு பிஎஸ்என்எல்-க்கு உதவும்.

பிஎஸ்என்எல் ரூ.51 விளம்பர சிம் சலுகை: பிஎஸ்என்எல் அதன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஒரு பதிவின்படி, புதிய இணைப்பை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ப்ரீபெய்ட் பேக்கேஜ் வழங்கப்படும். இந்த திட்டத்துடன் ஒரு இலவச சிம் மற்றும் 28 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டியும் கிடைக்கும்

Best Mobiles in India

English summary
BSNL Rs 997 Plan With 150 Days Validity Daily 2GB Data Unlimited Calls 100 SMS Who Can Choose
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X