BSNL அடி செம்ம அடி.. மாதம் ரூ.199 போதும்.. 150 நாட்கள் வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்கள்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் மாதத்துக்கு ரூ.199 செலவில் 150 நாட்கள் அதாவது 5 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டம் அறக்க பறக்க ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இதில் 150 நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். தனியார் நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு இந்த திட்டம் இருக்கிறது.
5 மாதங்களுக்கு மலிவான விலையில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 5 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும் இந்த திட்டத்துக்கான மாத செலவை கணக்கிட்டால், வெறும் ரூ.199 ஆக மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது. மற்ற நிறுவனங்களில் இந்த விலைக்கு திட்டம் கிடைக்காது.

பிஎஸ்என்எல் ரூ. 997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும், இந்த திட்டத்தில் 150 நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா மட்டுமே கிடைக்கும். ஓடிடி ஆப்கள் உள்ளிட்ட கூடுதல் சலுகைகள் கிடைக்காது. ஆகவே, வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.
இதில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்களை (Roaming Calls) செய்து கொள்ள முடியும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 150 நாட்களுக்கு 300 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த 2 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கும்.
இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கும். இதேபோல 150 நாட்கள் வேலிடிட்டியை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கொடுக்கவில்லை. ஆனால், ஜியோ நிறுவனத்திடம் 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் இருக்கிறது. இதில் கூடுதல் சலுகைகள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். இதற்கு ஏற்ப விலையும் அதிகமாக இருக்கும்.
அதாவது, ரூ.2,025 விலைக்கு கிடைக்கிறது. இதை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் டபுள் விலையாக இருக்கிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளில் ஓடிடி சந்தா, கிளவுட் ஸ்டோரேஜ், ஜெமினி ப்ரோ சந்தா உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். டேட்டாவும் தினசரி டேட்டா போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கொடுக்கப்பட்டும்.
ஜியோ ரூ.2,025 திட்ட விவரங்கள் (Jio Rs 2,025 Plan Details): இந்த திட்டத்தில் 200 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். மொத்த டேட்டாவை கணக்கிட்டால், 200 நாட்களுக்கு 500 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா 4ஜி வேகத்தில் கிடைப்பதால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கூடுதலாக கிடைக்கும்.
இதில் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் கிடையாது. லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கும். இந்த சலுகைகள் போக கூடுதல் சலுகையில் ஜியோஹாஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கும். இந்த ஓடிடி சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கும். இதில் 2000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். ஜியோ ஏஐ கிளவுட் சலுகையும் இதில் கிடைக்கும். இதில் ஏகப்பட்ட சலுகைகள் கிடைத்தாலும், ரூ.1000 விலைக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் திட்டம் கிடைக்கிறது. அதேபோல 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. டேட்டா சலுகையின் அடிப்படையில் வித்தியாசம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








