Home
News

காஸ்ட்லீயான ஜியோ ரீசார்ஜ்களின் கதை முடிஞ்சது.. 320GB உடன் BSNL கெத்தாக இறக்கிய 160 நாள் பிளான்!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கீழ் குபுகுபுவென புதிய வாடிக்கையாளர்கள் சேர்வது ஏன் என்கிற கேள்விக்கு, உங்களில் பலருக்கும் ஏற்கனவே விடை தெரிந்து இருக்கலாம். கடந்த 2024 ஜூலை மாதத்தில், அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தத்தம் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின.

ஒப்பீட்டளவில், மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனமானது மிகவும் மலிவான விலைக்கு. பல வகையான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கியதன் விளைவாக பல ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்கள் தங்கள் மொபைல் எண்களை பிஎஸ்என்எல்-க்கு போர்ட் (PORT) செய்தனர்.

320GB உடன் BSNL கெத்தாக இறக்கிய 160 நாள் பிளான்!

எவ்வளவு பேர் வெளியேறினாலும், அதே அளவிற்கு புதிய கஸ்டமர்கள் ஜியோ சேவையின் கீழ் இணைவதால், ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் தளம் (Jio's User Base) கொஞ்சம் கூட குறைந்ததாக தெரியவில்லை. ஏனென்றால் இந்நிறுவனமும் (பிஎஸ்என்எல்-ஐ போலவே) பயனர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ற திட்டங்களை வழங்குவதால் கில்லாடியாக உள்ளது.

அதிலொன்று தான் ஜியோவின் ரூ.999 திட்டம் (Jio Rs 999 Plan). மொத்தம் 98 நாட்கள் என்கிற வேலிடிட்டி (98 Days Validity), தினமும் 2ஜிபி டேட்டா (Daily 2GB Data) உடன் வரும் இந்த திட்டத்தை காலி செய்வதற்காகவே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ஒரு திட்டம் உள்ளது. அதுவும் ஜியோவை விட ரூ.3 மலிவான விலைக்கு. அது ரூ.997 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (BSNL Rs 997 Prepaid Plan) ஆகும். இதெப்படி ஜியோவின் ரூ.999 திட்டத்தை (அதாவது ரூ.1000 திட்டத்தை) காலி செய்கிறது? வாருங்கள் இவ்விரு திட்டங்களையும் ஒப்பிட்டு பார்ப்போம்.

முதல் பந்திலேயே சிக்ஸர் என்பது போல.. பிஎஸ்என்எல் ரூ.997 திட்டமானது 160 நாட்கள் என்கிற வேலிடிட்டி (160 Days Validity) உடன் வருகிறது. அதாவது ஜியோவின் ரூ.999-ஐ விட 62 நாட்கள் (கிட்டத்தட்ட 2 மாதங்கள் அதிக) வேலிடிட்டி உடன் வருகிறது. போதாக்குறைக்கு பிஎஸ்என்எல் ரூ.997 திட்டமும் ஜியோவின் ரூ.999-ஐ போலவே டெய்லி 3ஜிபி டேட்டா என மொத்தம் 320ஜிபி அளவிலான டேட்டாவை (Total of 320GB Data) வழங்குகிறது.

கூடவே ஜியோவின் ரூ.999 திட்டத்தை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited voice calls) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் (Daily 100 SMS) வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக ரூ.3 மலிவான விலைக்கு பிஎஸ்என்எல் ரூ.997 திட்டமானது, மிகவும் வெளிப்படையாகவே ஜியோவின் ரூ.999 திட்டத்தை தோற்கடித்து விடுகிறது.

ஆனால் இங்கே ஜியோவின் ரூ 999 திட்டத்தின் கீழ் கிடைப்பது 4ஜி மற்றும் 5ஜி டேட்டா (4G and 5G Data) என்பதையும், பிஎஸ்என்எல்-ன் கீழ் கிடைப்பது 3ஜி டேட்டா என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். ஒருவேளை உங்கள் பகுதியில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் (BSNL Network) சிறப்பாக இருக்குமென்றால், நீங்கள் கண்களை மூடிக்கொண்டு ரூ.997-ஐ ரீசார்ஜ் செய்யலாம்.

மாறாக வேலிடிட்டி முக்கியம் அல்ல, இண்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) தான் முக்கியம் என்பவர்கள் ரூ.999-ஐ ரீசார்ஜ் செய்யலாம். இந்த ஜியோ திட்டத்தின் கீழ் தினமும் 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா ஆபர் ஆகிய இரண்டுமே கிடைக்கும். ஜியோ வழங்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபரை (Jio Unlimited 5G Data Offer) பெற, நீங்கள் இருக்கும் பகுதியில் ஜியோ 5ஜி அறிமுகமாகி இருப்பதும், உங்களிடம் 5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் (5G Support Smartphone) இருப்பது அவசியம்.

பிஎஸ்என்எல்லின் ரூ 997 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முன்னரே குறிப்பிட்டபடி இது 160 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகிறது. சுவாரசியமாக இது செல்லுபடியாகும் 160 நாட்களுக்கும் வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் தினமும் 2ஜிபி அளவிலா டேட்டா மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 997 Plan Rs 3 Cheaper Than Jio Rs 999 But Offers 160 Days Validity 320GB Data Voice SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X