ஒரே BSNL ரீசார்ஜ்.. 160 நாட்களுக்கு கவலை இருக்காது.. தினமும் 2ஜிபி டேட்டா.. எந்த திட்டம்? என்ன விலை?
தனியார் டெலிகாம் (Telecom) நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய திட்டங்கள் மற்றும் சில திட்டங்களில் எக்கச்சக்க சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்கள் 11 முதல் 25 சதவீதம் வரை உயர்வை அறிவித்தன. ஆனால் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் எந்த திட்டங்களின் விலையும் உயர்த்தவில்லை.
இப்போதும் கூட மலிவு விலையில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கும் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை திட்டம் ஒன்று 160 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டம் குறித்து இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Plan) தான் 160 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே மொத்தமாக 320ஜிபி டேட்டா நன்மை இதில் உள்ளது. பின்பு வரம்பற்ற அழைப்பு, தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
அதேபோல் ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம். ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களும் இதேபோன்று திட்டங்களை வைத்துள்ளன. இப்போது அந்த திட்டங்களைச் சற்று விரவாகப் பார்க்கலாம்.
ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை.
அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்குகிறது ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது. குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
அதன்படி வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் உள்ளிட்ட நன்மைகள் ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.
எனவே ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் திட்டங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் தான் அதிக வேலிடிட்டி மற்றும் அதிக சலுகைகளை வழங்குகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கி உள்ளது. கூடிய விரைவில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும்.


Click it and Unblock the Notifications








