அட இது தெரியாம போச்சே.. Jio, BSNL.. ரூ.999 vs ரூ.997 திட்டங்கள்.. எது அதிக சலுகைகள் வழங்குகிறது?
ஜியோ நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மலிவு விலையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதுவும் கடந்த சில மாதங்களில் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிக வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதற்குக் காரணம் தனியார் நிறுவனங்களில் ப்ரீபெய்ட் திட்டங்கள் விலை உயர்வு தான்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஜியோ ரூ.999 திட்டம் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் என்னென்ன நன்மைகள் வழங்குகின்றன? எவ்வளவு நாட்கள் வேலிடிட்டி தருகின்றன? மற்றும் எது சிறந்தது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 98 நாட்கள் ஆகும். எனவே ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது.
ஆனால் ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் எந்தவொரு ஓடிடி நன்மையும் வழங்கப்படவில்லை. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud)ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 160 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 320ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
இதுதவிர தினசரி 100எஸ்எம்எஸ், ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம்.

எது சிறந்தது? அதாவது ஜியோவை விட விட 2 ரூபாய் குறைவில் அதிக நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஆனால் ஜியோ நிறுவனத்திடம் 5ஜி சேவை இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது தான் 4ஜி சேவையை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது நாட்டில் சில முக்கிய இடங்களில் 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் இந்நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications