Home
News

BSNL-க்கு சல்யூட்.. 14 நாட்கள் இலவச வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. மார்ச் 31 கடைசி!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ரூ.997 விலை கொண்ட திட்டத்தில் 14 நாட்கள் இலவச வேலிடிட்டி சேர்க்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, மலிவான விலைக்கு 150 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இது இருக்கிறது. இப்போது, கூடுதலாக வேலிடிட்டி சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்ட பிறகும் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், நாளுக்கு நாள் சலுகைகள் அதிகமாக கிடைத்து வருகின்றன. இப்போது, அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வரும் பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தில் 14 நாட்கள் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31ஆம் தேதி வரையில் ரீசார்ஜ் செய்வோருக்கு மட்டுமே இது கிடைக்கும்.

BSNL-க்கு சல்யூட்.. 14 நாட்கள் இலவச வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் ரூ. 997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan): 5 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இது இருக்கிறது. அதாவது, 150 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. இப்போது, 14 நாட்கள் வேலிடிட்டி சேர்க்கப்பட்டு உள்ளதால், 164 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இது 2 வாரங்களுக்கு கூடுதல் சலுகைகளை பெறுவதை உறுதி செய்து உள்ளது.

அதாவது, வெறும் வேலிடிட்டி மட்டுமே சேர்க்கப்படாமல், அந்த நாட்களில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் கொடுத்து உள்ளது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.

164 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 328 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவை போலவே 164 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் (Unlimited Local & STD Roaming Calls) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகைகளை 5 மாதங்களுக்கு மேல் பெற்று கொள்ளலாம்.

14 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி

28 ஜிபி டேட்டா, 1400 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. இந்த சலுகைகளை முற்றிலும் இலவமாக பெற்று கொள்ளலாம். மார்ச் 31ஆம் தேதி வரையில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும். பிறகு வழக்கம்போல 150 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.

இதைவிட கூடுதல் வேலிடிட்டி மற்றும் மலிவான விலைக்கு மற்றொரு ரீசார்ஜ் திட்டம் இருக்கிறது. இதில் தினசரிக்கு டேட்டா கிடைக்காது. லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்படும். மற்ற சலுகைகள் கிடைத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். சிம் ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்களை விரும்பும் கஸ்டமர்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெற்று கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 897 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 897 Prepaid Plan): முந்தைய திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி சேர்க்கப்பட்டே 164 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், இதில் எந்த சலுகைகளும் இல்லாமல், 165 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் மொத்தமாகவே 24 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

இந்த டேட்டா மற்றும் வேலிடிட்டி மட்டுமே மாறுபடுகிறது. மற்றப்படி அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் வழக்கம்போக கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் உங்களது தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 997 Plan Offers 14 Days Free Validity With 2GB Data Unlimited Voice Calls Till March 31 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X