BSNL சிம் இருக்கா.. அடுத்த 150 நாட்கள்.. உடனே இதை பண்ணிடுங்க.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் அடுத்த 150 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை மலிவான விலைக்கு பெற வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக் கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களில் 150 நாட்கள் வேலிடிட்டியில் திட்டங்கள் கிடையாது. வோடபோன் ஐடியாவில் 180 நாட்களுக்கு திட்டம் இருக்கிறது. ஆனால், விலையும் அதிகமாக இருக்கும். அதுவே பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கிடைக்கும் ரூ.997 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், மலிவான விலைக்கு சலுகைகளை பெறலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 997 திட்டம் (BSNL Rs 997 Plan): பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே 150 நாட்கள் வேலிடிட்டியை ரூ.1000 விலைக்குள் கொடுக்கிறது. இந்த 150 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ்) சலுகையை கொடுக்கிறது. விலை மலிவாக இருப்பதால், சிம் ஆக்டிவுக்காக கிடைக்கும் திட்டமாக இது தோன்றலாம்.
ஆனால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த பிஎஸ்என்எல் ரூ. 997 திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, 150 நாட்களில் 300 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் கூட 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கும். சிம் ஆக்டிவ் திட்டங்கள் கிடைக்கும் விலையில் தினசரி டேட்டாவை கொடுக்கிறது.
மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் செய்து கொள்ளலாம். சிம் ஆக்டிவ் மட்டுமே போதும், டேட்டா சலுகைகள் வேண்டாம் என்று கேட்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது. இது ரூ.1499 விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அதிகபட்சம் ரூ.500 மட்டுமே விலை அதிகமாக இருக்கிறது. ஆனால், வேலிடிட்டி 2 மடங்காக கிடைக்கும்.
அதாவது, முந்தைய திட்டத்தில் 150 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்துக்கு 300 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இருப்பினும், இது சிம் ஆக்டிவ் திட்டமாக இருப்பதால், முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போல தினசரிக்கு 2 ஜிபி டேட்டா சலுகை இந்த திட்டத்துக்கு கிடைக்காது. லம்ப்-சம் டேட்டா சலுகை மட்டும் போதுமான அளவுக்கு கொடுக்கப்படும்.
பிஎஸ்என்எல் ரூ. 1499 திட்டம் (BSNL Rs 1499 Plan): 300 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், கூடவே லம்ப்-சம் டேட்டாவும் கிடைக்கும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 32 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
இந்த டேட்டா சலுகைகளை தவிர வேறு எந்த டேட்டா சலுகையும் கிடைக்காது. 32 ஜிபி டேட்டாவுக்கு பிறகு கூடுதல் டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களுக்கு கஸ்டமர்கள் சென்று கொள்ளலாம். இந்த சலுகைகள் போக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது.
மேலும், எஸ்எம்எஸ் சலுகைகள் லம்ப்-சம் முறையில் கொடுக்கப்படாமல், வழக்கம் போல நாளொன்றுக்கு 100 கணக்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, 300 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த திட்டங்களில் வேலிடிட்டி மற்றும் டேட்டா தேவைக்கு ஏற்ப நல்ல தேர்வை கஸ்டமர்களே முடிவு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








