Home
News

தூக்கி போட்டு சாத்திய BSNL.. மாதம் ரூ.200 க்கு 150 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 100 எஸ்எம்எஸ்கள்!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படி மாதத்துக்கு ரூ.200 செலவில் 5 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை பிஎஸ்என்எல் கொடுத்துள்ளது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் தினந்தோறும் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மட்டுமே 150 நாட்கள் வேலிட்டி கொண்ட திட்டம் இருக்கிறது. மற்ற நிறுவனங்களில் 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிது. ஜியோ மற்றும் ஏர்டெல்லில் 180 நாட்கள் திட்டம் கிடையாது. அதிலும் தினசரி டேட்டாவுடன் மலிவான விலைக்கு 150 நாட்கள் கிடைப்பது, பிஎஸ்என்எல்லில் மட்டுமே.

தூக்கி போட்டு சாத்திய BSNL.. மாதம் ரூ.200 க்கு 150 நாட்கள் வேலிடிட்டி!

150 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.997 திட்டம் கிடைக்கிறது. ஆகவே, 30 நாட்கள் வீதம் 5 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. 1 மாதத்துக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால் ரூ.199 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, ரூ.200 செலவில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ள முடிகிறது.

பிஎஸ்என்எல் ரூ.997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த திட்டத்தை பெறும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு 150 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். 5 மாதங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படும். 100 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம்.

இதை தினசரிக்கு அனுப்பி கொள்ளலாம். டேட்டா சலுகையும் தினசரிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் தொடர்ந்து டேட்டா கிடைக்கும். ஆனால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே கிடைக்கும். 150 நாட்களுக்கு மொத்தமாக 300 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

இது விலையை விட கூடுதலாகவே இருக்கிறது. 5 மாதங்களுக்கு மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், இதை விட நல்ல ரீசார்ஜ் கிடைக்காது. பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது புதிய சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு பிரத்யேக ரீசார்ஜ் திட்டத்தை கொடுத்து வருகிறது. இதில் ரூ.1 விலை கொண்ட திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படுகிறது.

அதாவது, பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கி பிறகு அது ஆக்டிவேட் செய்யப்பட்ட உடனயே முதலாவது ரீசார்ஜ் செய்யும்போது மட்டுமே ரூ.1 விலைக்கு திட்டம் கொடுக்கப்படுகிறது. இந்த விலைக்கு மாதம் முழுவதும் வேலிடிட்டி, டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதை மறுபடியும் ரீசார்ஜ் செய்ய முடியாது.

பிஎஸ்என்எல் ரூ.1 திட்ட விவரங்கள் (BSNL Rs.1 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 30 நாட்களுக்கு 60 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு முதலில் பார்த்த திட்டத்தை போலவே 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் அனுப்ப கிடைக்கும். இந்த ஒட்டுமொத்த சலுகைகளும் வெறும் ரூ.1 விலைக்கு கொடுக்கப்படும். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை விட மலிவான விலைக்கு இந்த திட்டங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

Best Mobiles in India

English summary
BSNL Rs 997 Plan 150 Days Validity Unlimited Calls 100 SMS Per Day Check Cheapest 5 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X