ரூ.99 போதும்.. இந்தியா முழுவதும்.. வாய்ஸ்-ஒன்லி, SMS-ஒன்லி ஆட்டத்தை முடிச்சு விட்ட BSNL.. ஆடிப்போன ஜியோ!
டிராய்-ன் கட்டளைக்கு இணங்கி புதிய வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்களின் அறிமுகம், அதே டிராய்-க்கு பயந்து அவைகளின் விலைகளை குறைப்பது, கூடவே நன்மைகளில் (வேலிடிட்டி) திருத்தம் செய்வது என ஒட்டுமொத்த தனியார் டெலிகாம் நிறுவனங்களும் (ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா) பரபரப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.
இம்மூன்று நிறுவனங்களும் உன்னை விட நான் மலிவாக வழங்குகிறேன்.. உன்னை விட எனக்கு தான் அதிக வேலிடிட்டி என்று "ஆட்டம்" ஆடிக்கொண்டிருக்கும்.. மறுபக்கம் அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) வெறும் ரூ.99 க்கு வாய்ஸ்-ஒன்லி மற்றும் எஸ்எம்எஸ்-ஒன்லி ஆட்டத்தை முடித்து விட்டுள்ளது.

ஏர்டெல்லின் பேஸிக் வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் தற்போது ரூ.30 விலை குறைப்பை பெற்று ரூ.469 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதேபோல ஜியோவின் என்ட்ரி லெவல் பேஸிக் வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் தற்போது ரூ.10 விலை குறைப்பை பெற்று ரூ.448 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
ஆனால் பிஎஸ்என்எல்-ன் என்ட்ரி லெவல் வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் ஆனது ரூ.99 க்கு கிடைக்கிறது. ஜியோ,ஏர்டெல் மற்றும் வோடாபோனை போல, இதுவொன்றும் புதிதாக அறிமுகமான திட்டம் அல்ல; டிராய்-க்கு பயந்து அறிமுகமான திட்டம் அல்ல. டிராய்-ன் புதிய வழிகாட்டுதல்கள் வரும் முன்பே - பிஎஸ்என்எல் இதுபோன்ற திட்டங்களை வழங்கி வருகிறது
பிஎஸ்என்எல் நிறுவனமாமானது வாய்ஸ் மற்றும் வாய்ஸ் + எஸ்எம்எஸ் வகையின் கீழ் இரண்டு திட்டங்களை வழங்குகிறது. ஒன்றின் விலை ரூ.99 ஆகும், மற்றொன்றின் விலை ரூ.439 ஆகும். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் புதிய வாய்ஸ்-எஸ்எம்எஸ் திட்டங்களை போலவே, இந்த இரண்டு வவுச்சர்களும் டேட்டா நன்மை எதுவும் கிடைக்காது.
பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? பிஎஸ்என்எல்-ன் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் 17 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். வேறு எந்த நன்மையையும் கிடைக்காது. எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்காது இது அடிப்படையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும் காலிங் வவுச்சராகும். இது மும்பை, டெல்லி உட்பட இந்தியாவின் எல்லா இடங்களிலும் ரீசர்ஜ் செய்ய கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.439 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இப்போதைக்கு இதுதான் இந்தியாவிலேயே மிகவும் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி அல்லது மலிவான விலையில் நீண்ட நாட்களுக்கு உங்களுடைய சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க உதவும் திட்டமாகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
இவ்விரு திட்டங்களை தவிர்த்து, இதே போன்ற திட்டங்கள் எதுவும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இல்லை. ஒருவேளை ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவிற்கு போட்டியாக 336 நாட்கள் அல்லது 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் (வரும் நாட்களில்) அறிமுகம் செய்யலாம்.
இப்போதைக்கு இந்நிறுவனத்தின் முழு கவனம் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்காக 4ஜியை வெளியிடும் பணியில் மட்டுமே உள்ளது இதுவரை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 60,000 க்கும் மேற்பட்ட 4ஜி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல்-ன் 4ஜி சிம் வைத்திருக்கும் பயனர்களுக்கு, வோல்ட்இ (VoLTE) இயல்பாகவே இயக்கப்படும். அதாவது இதை கைமுறையாக செயல்படுத்துவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை
கூடிய விரைவில், பிஎஸ்என்எல் அதன் சேவைகளில் இசிம் (eSIM) தொழில்நுட்பத்தின் வருகை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பிற மேம்படுத்தல்களை செய்ய உள்ளது. நினைவூட்டும் வண்ணம் பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் அதன் எப்டிடிஎச் (FTTH - Fiber-to-the-Home) கனெக்ஷன் உடன் முற்றிலும் இலவசமாக லைவ் டிவி (IFTV), சிம் கியோஸ்க்குகள், டி2டி (Direct-to-Device) தொடர்பு மற்றும் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்தது.


Click it and Unblock the Notifications








