அட இது தெரியாம போச்சே.. BSNL ரூ.99 ரீசார்ஜ் செஞ்சா இவ்ளோ நாள் சிம்மை ஆக்டிவ்-ஆ வச்சிக்கலாமா!
கண்ணா.. அது போன மாசம்.. இது இந்த மாசம் - என்று வகைப்படுத்தும் படியாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திடீர் வளர்ச்சியை யார் வேண்டுமானாலும் பிரித்து பார்க்க முடியும். பான் இந்தியா 4ஜி சேவை, பான் இந்தியா இசிம் சேவை, வோவைஃபை காலிங் சேவையின் விரிவாக்கம், ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி அதிக எண்ணிக்கையிலான புதிய யூசர்களை சேர்த்தது - என பிஎஸ்என்எல் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில் - இதுநாள் வரையிலாக "மொக்கையான ரீசார்ஜ்களாக" பார்க்கப்பட்ட சில பிஎஸ்என்எல் திட்டங்கள்டெலிகாம் சந்தையில் கிடைக்கும் "பெஸ்ட் பிளான்களாக" மாறியுள்ளன. அதிலொன்று தான் ரூ.99 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பிஎஸ்என்எல்-ன் என்ட்ரி லெவல் பிளான். இது ரூ.100 க்கும் குறைவான விலையில் சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள விரும்பும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திட்டமாகும்.

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: நன்மைகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல்-ன் ரூ.99 திட்டம் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் "அன்லிமிட்ட் டேட்டா" உடன் வருகிறது. உண்மையில் இதன் கீழ் 50எம்பி டேட்டா மட்டுமே ஹை-ஸ்பீட் டேட்டாவாக கிடைக்கும். அதன் பிறகு 40 கேபிபிஎஸ் என்கிற ஸ்பீடின் கீழ் டேட்டா கிடைக்கும்
அதாவது உங்களுக்கு நிறைய டேட்டா தேவைப்பட்டால் அல்லது ஹைஸ்பீட் டேட்டா தேவைப்பட்டால் - இந்த திட்டம் உங்களுக்கு சரியானதல்ல. மாறாக மிகவும் மலிவான விலைக்கு, வாய்ஸ் கால் நண்மைகள் மட்டுமே தேவைப்பட்டால் அல்லது ரூ.100 க்குள் என்கிற பட்ஜெட்டில் உங்கள் சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க விரும்பினால் - இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.99 திட்டத்துடன் இணைக்கப்பட்ட சர்வீஸ் வேலிடிட்டி (சேவை செல்லுபடியாகும் காலம்) 15 நாட்கள் ஆகும். எனவே ஒரு மாதத்திற்கு இந்த திட்டத்துடன் இரண்டு முறை ரீசார்ஜ் செய்தால், ரூ.200 க்குள் உங்கள் சிம் கார்ட்டை செயலில் வைத்திருக்க முடியும்.
ஏர்டெல்லை முந்திய பிஎஸ்என்எல்: அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில், புதிய மொபைல் வாடிக்கையாளர் சேர்க்கையில் பாரதி ஏர்டெல்லை (Airtel) முந்தியுள்ளது. அதுவும் சாதாரணமாக இல்லை. ஏர்டெல் நிறுவனத்தை விட 3 மடங்கு அதிக எண்ணிக்கையிலான புதிய கஸ்டமர்களை சேர்த்துள்ளது.
இது கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் செய்திராத சாதனை ஆகும். ஆனாலும் கூட முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. டிராய் அறிக்கையின்படி ரிலையன்ஸ் ஜியோ - 19 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து பிஎஸ்என்எல் - 13.85 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ந்துள்ளது. கடைசியாக ஏர்டெல் - 4.96 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ந்துள்ளது.
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவித்த நேரத்தில் 3ஜி சேவைகளை மட்டுமே வழங்கிய போதிலும், 2024 செப்டம்பரில் அனைத்து ஆபரேட்டர்களிலும் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் சேர்த்திருந்தது. அதன் நீட்சியாக ஆகஸ்ட் 2025-இலும் நல்ல எண்ணிக்கையிலான புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைளால் தான் ரூ.99 போன்ற மிகவும் பயனுள்ள திட்டங்கள் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல், வி என்கிற வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களை போலவே பிஎஸ்என்எல் நிறுவனமும் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தி இருந்தால்.. புதிய கஸ்டமர்களை ஈர்த்திருக்க முடியாது!


Click it and Unblock the Notifications








