Home
News

BSNL-க்கு கும்பிடு.. இனி ரூ.99 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. லம்ப்-சம் டேட்டா.. 14 நாட்கள் வேலிடிட்டி!

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வரும் நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. மலிவான விலையில் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு ரூ.150 க்கு கீழ் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.

வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் டேட்டா (Data) திட்டங்கள்:

1. பிஎஸ்என்எல் ரூ.147 திட்டம் (BSNL Rs.147 Plan): பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளை தேடுபவர்களுக்கான சிறந்த திட்டம் இது. இந்த திட்டத்தில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங்கில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) வழங்கப்படுகின்றன. இத்துடன் 5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த 5ஜி டேட்டா தீர்ந்த பிறகு, டேட்டா வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும். 24 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும்.

BSNL-க்கு கும்பிடு.. இனி ரூ.99 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

2. பிஎஸ்என்எல் ரூ.99 திட்டம் (BSNL Rs.99 Plan): டேட்டாவை விட வாய்ஸ் கால்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கான பேக் இது. இதில் ஹோம் எல்எஸ்ஏ (Home LSA) மற்றும் மும்பை, டெல்லி உட்பட நேஷனல் ரோமிங்கில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகின்றன. அவசர தேவைகளுக்காக 50 எம்பி டேட்டாவும் கிடைக்கும் (இதற்கு மேல் வேகம் 40 Kbps ஆக குறையும்). இதன் வேலிடிட்டி 14 நாட்களாக இருக்கிறது.

3. பிஎஸ்என்எல் ரூ. 107 பிளான் (BSNL Rs.107 Plan): லிமிடெட் வாய்ல் கால்கள் மற்றும் டேட்டா பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது. இதில் 200 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் நிமிடங்கள் (Free Voice Mins) வழங்கப்படுகின்றன. மேலும், மொத்தம் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா வரம்பிற்கு பிறகு வேகம் 40 Kbps ஆக குறைக்கப்பட்டு அன்லிமிட்டெட் டேட்டா கிடைக்கும். இதன் வேலிடிட்டி 20 நாட்கள் ஆகும்.

டேட்டா ஒன்லி வவுச்சர்கள் (Data Only Vouchers): உங்களிடம் ஏற்கனவே வேலிடிட்டி திட்டம் இருந்து, கூடுதல் டேட்டா மட்டும் தேவைப்பட்டால் இந்த திட்டங்களை தேர்வு செய்யலாம்.

1. பிஎஸ்என்எல் ரூ.105 திட்டம் (BSNL Rs.105 Plan): அதிகப்படியான டேட்டா தேவைப்படுபவர்களுக்கு இந்த வவுச்சர் ஒரு வரப்பிரசாதம். இதில் மொத்தம் 20 ஜிபிக்கான டேட்டா வழங்கப்படுகிறது. 20 ஜிபிக்கு பிறகு வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும். இதன் வேலிடிட்டி 7 நாட்கள் ஆகும்.

2. பிஎஸ்என்எல் ரூ.58 திட்டம் (BSNL Rs.58 Plan): இது ஒரு வார கால டேட்டா பேக் ஆகும். இதில் 8 ஜிபி அதிவேக டேட்டா (அதன் பிறகு 40 Kbps வேகம்) வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 7 நாட்கள். ஆனால், இந்த வவுச்சரை கொண்டு முதன்மை திட்டத்தின் வேலிடிட்டியை நீட்டிக்க (Validity Extension) முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

3. பிஎஸ்என்எல் ரூ. 16 திட்டம் (BSNL Rs.16 Plan): ஒரு நாள் அவசர டேட்டா தேவைக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். வெறும் 16 ரூபாயில் 2 GB அதிவேக டேட்டா (அதன் பிறகு 40 Kbps வேகம்) வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 1 நாள் மட்டுமே. இதிலும் வேலிடிட்டி நீட்டிப்பு வசதி கிடையாது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 99 Plan With Unlimited Voice Calls 50MP Data Check BSNL Prepaid Plan Under Rs 150
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X