Home
News

BSNL போட்டப்போடு.. வெறும் ரூ.97 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 30ஜிபி டேட்டா.. வேலிடிட்டி எப்படி?

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் கொடுக்க முடியாத விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் சிம் ஆக்டிவ் சலுகைகளை பிஎஸ்என்எஸ் (BSNL) நிறுவனம் வழங்குகிறது. இப்படி ரூ.100க்கு கீழ் உள்ள பெஸ்ட் திட்டங்களை இங்கே பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ 99 திட்ட விவரங்கள் (BSNL Rs 99 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் கொடுக்க முடியாத விலையில் இருக்கிறது. இதுவொரு ஸ்பெஷல் டாரிஃப் வவுச்சர் (Special Tariff Voucher) திட்டமாகும். இருப்பினும், இந்த திட்டத்துக்கு பேஸ் ஆக்டிவ் பிரீபெய்ட் திட்டம் (Base Active Prepaid Plan) தேவையில்லை.

ரூ.97 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 30ஜிபி டேட்டா.. வேலிடிட்டி எப்படி?

இந்த பிஎஸ்என்எல் ரூ 99 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் கொடுக்கப்படாது. முழுக்க முழுக்க வாய்ஸ் கால் சலுகை மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

அதோடு 18 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதுவொரு சர்வீஸ் வேலிடிட்டி திட்டமாகும். சிம் ஆக்டிவாக இருக்கவும், இந்த திட்டத்தை பயன்படுத்தலாம். மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் மிகவும் மலிவான விலையில் வாய்ஸ் திட்டம் வேண்டுமானால், இந்த திட்டம் நல்ல தேர்வாகும். இதேபோல ரூ 100க்கு கீழ் இருக்கும் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ 97 திட்ட விவரங்கள் (BSNL Rs 97 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 15 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்தலாம். ஆகவே, மொத்தமாக 30 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

ரூ.97 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 30ஜிபி டேட்டா.. வேலிடிட்டி எப்படி?

இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த சலுகைகள் போக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், லோக்தூன் கன்டென்ட் (Lokdhun Content) சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 94 திட்ட விவரங்கள் (BSNL Rs 94 Plan Details): இதுவொரு டேட்டா வவுச்சர் (Data Voucher) திட்டமாகும். இந்த திட்டத்தில் 30 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இதுவொரு லம்ப்சம் டேட்டாவாகும். அதோடு 200 நிமிடங்களுக்கான அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. இதைவிட கம்மியான விலையில் தினசரி டேட்டாவோடு மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 87 திட்ட விவரங்கள் (BSNL Rs 87 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால் சலுகை மட்டுமல்லாமல், டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதன் பின்பு 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கிறது.

ஆகவே, மொத்தமாக 14 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த சலுகைகள் போக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டமும் பேஸ் ஆக்டிவ் திட்டமாகும். இந்த திட்டத்துக்கு 14 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 99 Plan With Unlimited Voice Calling, 18 Days Service Validity Check Under Rs 100 Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X