Home
News

2026 இறங்கி அடித்த BSNL.. இனிமே ரூ.99 போதும்.. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, வாய்ஸ் கால்கள்.. 50 எம்பி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 2026 ஆம் ஆண்டிலும் ரூ.99 விலை கொண்ட திட்டம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மலிவான விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் டேட்டா சலுகைகளை கொடுத்துள்ளது. ரூ.100 இருந்தால் போதும் வாய்ஸ் கால்களுடன் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம்.

ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ரூ.100 விலைக்கும் கம்மியாக ரீசார்ஜ் செய்வது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத செயலாகும். ஆனால், மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனம், ஆரம்பத்தில் இருந்தே மலிவான விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்களை கொடுத்து வருகிறது.

2026 இறங்கி அடித்த BSNL.. இனிமே ரூ.99 போதும்.. அன்லிமிடெட் லோக்கல்!

சொல்லப்போனால், தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி சேவையை கொடுத்த பிறகு ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின. அந்த நேரத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை கொடுக்காமல் இருந்ததால், மலிவான விலைக்கே திட்டங்கள் கிடைத்தன. ஆகவே, பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டால், ரீசார்ஜ் கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நாடு முழுவதும் 4ஜி சேவைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கிவிட்ட பிறகும் பழைய விலைக்கே ரீசார்ஜ் திட்டங்களை கொடுத்து வருகிறது. இந்த மலிவான விலையில் ரூ.99 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் கஸ்டமர்களிடையே அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இதில் சிம் ஆக்டிவ் கிடைப்பது மட்டுமல்லாமல், டேட்டா சலுகையும் வருகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 99 திட்ட விவரங்கள் (BSNL Rs 99 Plan Details): 14 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ள இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD & Roaming Voice Calls) கிடைத்துள்ளது. மேலும், 50 எம்பி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

14 நாட்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு சிம் கார்டு ஆக்டிவ் வேண்டுமானால், 2026 ஆம் ஆண்டிலும் இந்த திட்டம் மட்டுமே சரியான தேர்வாக இருக்கும். மேலும், கூடுதல் டேட்டா சலுகை வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ. 147 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் கூடுதல் வேலிடிட்டியுடன் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 147 திட்ட விவரங்கள் (BSNL Rs 147 Plan Details): 24 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது முந்தைய திட்டத்தைவிட கூடுதல் வேலிடிட்டி மற்றும் டேட்டா சலுகையாக இருக்கிறது. மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கொடுத்துள்ளது.

ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த திட்டங்களுக்கு எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படவில்லை. ஒருவேளை தினசரி டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் மாதம் வேலிடிட்டி வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ.199 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பெறலாம். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை கொடுத்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 99 Plan With Unlimited Local STD Roaming Voice 14 Days Validity 50MB Data in 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X