BSNL.. ரூ.100-க்கு கதை முடிஞ்சு.. Jio, Airtel, Vi ஓரம் போச்சு.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. லம்ப்-சம் டேட்டா!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மலிவான விலைக்கு திட்டங்களை கொடுப்பது தெரியும். ஆனால், இவ்வளவு மலிவான விலைக்கு திட்டங்கள் இருக்கிறதா என்று ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி சில திட்டங்கள் இருப்பது பலருக்கு தெரியாது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டங்களின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரூ.99 விலை கொண்ட திட்டமே பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவுடன் கிடைக்கும் மலிவு விலை திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தில் அடுத்தடுத்து வேலிடிட்டி குறைக்கப்பட்டது. இருப்பினும், விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆரம்பத்தில் 18 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. பிறகு 15 நாட்களாக குறைக்கப்பட்டது.

இப்போது, 14 நாட்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ரூ.100 இருந்தால் போதும், ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற ஆச்சர்யம் இன்றும் இருப்பதால், அந்த திட்டம் மீதான வரவேற்பு குறையவில்லை. அதேபோல, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்தே வேலிடிட்டி குறைக்கப்பட்டது. இதனால், பெரிய பின்னடைவை ஏற்படுத்தவில்லை.
பிஎஸ்என்எல் ரூ 99 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 99 Prepaid Plan): இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா மட்டுமே கிடைக்கும். எஸ்எம்எஸ் சலுகை கிடைக்காது. ஆகவே, இந்த திட்டத்துக்கு 14 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Voice Calls), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கும்.
50 எம்பி டேட்டா மட்டுமே கிடைக்கும். இருப்பினும், இந்த லம்ப்-சம் டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா தொடர்ந்து கொடுக்கப்படுகிறது. டேட்டா வவுச்சர்களை பெற்றால், 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. கொஞ்சம் கூடுதல் வேலிடிட்டி வேண்டுமானால், அடுத்து வரும் திட்டம் பக்காவாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ 107 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 107 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல டேட்டாவும் கூடுலாக கிடைக்கும். அதாவது, முந்தைய திட்டத்தில் 14 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. இதில் 22 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால், வாய்ஸ் கால்களில் ஸ்விஸ்ட் இருக்கிறது.
முந்தை திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைத்தது. இதில் 200 நிமிடங்களுக்கு மட்டுமே வாய்ஸ் கால்கள் கிடைக்கும். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா இதிலும் கிடைக்கும். சிம் ஆக்டிவ் விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பக்காவாக இருக்கும். இதிலும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படவில்லை. எஸ்எம்எஸ்கள் மற்றும் தினசரி டேட்டாவுக்கு மற்றொரு திட்டம் உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ 153 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 153 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கும். லம்ப்-சம் டேட்டா கிடையாது. நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை கொடுத்து இருக்கிறது. இதில் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது.
அதிலும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் உள்ளது. இந்த திட்டம் மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மலிவான விலைக்கு தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது. இந்த திட்டங்கள் அடிமட்ட விலைக்கு எல்லா சர்க்கிள்களிலும் கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








