அடிச்சான் பாரு BSNL.. வெறும் ரூ.99 க்கு சூப்பரான சிம் ஆக்டிவ் பிளான்!
இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தான் - தற்போது இந்தியாவிலேயே மிகவும் மலிவான விலையில் 4ஜி சேவையை வழங்கும் நிறுவனமாக உள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் பெரும்பாலான பிரிவுகளில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குவதை விட பிஎஸ்என்எல்-ன் திட்டங்கள் குறைந்தது 20-30% மலிவானதாக உள்ளன.
மேலும் கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு 4ஜி சேவையை விரிவுபடுத்துவதில் இந்நிறுவனம் தனது நேரத்தையும், வளங்களையும் செலவிட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி சேவைகளை நோக்கி நகர்ந்துள்ளன, இதற்கிடையில் தான் பிஎஸ்என்எல் இன்னுமும் அதன் 4ஜி வெளியீட்டை நிர்வகித்து வருகிறது. ஆனால் இதுவொன்றும் அவ்வளவு மோசமான விஷயம் அல்ல. ஏனென்றால் எல்லோர்க்கும் 5ஜி ஆனது அத்தியாவசியமாகி விட்ட சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை.

எனவே தான் இந்த 2026 ஆம் ஆண்டிலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மிக மிக மலிவான விலைக்கு 4ஜி சேவையை வழங்க முடிகிறது. அவைகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.99 திட்டம் - மிகவும் பிரபலமான ஒரு திட்டமாகும். இது அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையுடன் வரும் மிகவும் மலிவான சிம் ஆக்டிவ் ரீசார்ஜ் ஆகும்
இது 14 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. டேட்டா நன்மையை பொறுத்தவரை இது வெறும் 50எம்பி அளவிலான 4ஜி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. டேட்டா லிமிட்டை தாண்டிய பின்னர் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
ஆக இந்த திட்டம் அதிக டேட்டா நுகர்வோருக்கானது அல்ல. மாறாக சிம் கார்ட்டை மிகவும் மலிவான விலைக்கு ஆக்டிவ் ஆக வைத்திருக்க விரும்புவோர்களுக்கான திட்டமாகும். இந்த திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.7.07 மட்டுமே செலவாகும். பிஎஸ்என்எல்-ன் ரூ.99 திட்டம் தற்போது அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
உங்களால் இன்னும் கொஞ்சம் செலவிட முடிந்தால், நீங்கள் நேரடியாக ரூ.147 திட்டத்திற்கு செல்ல வேண்டும். இது 5ஜிபி டேட்டா மற்றும் 24 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பிடத்தக்க வண்ணம் இந்த இரண்டு திட்டங்களிலும் இல்லாதது எஸ்எம்எஸ் (SMS) நன்மைகள். இருப்பினும், நீங்கள் விரும்பினால், டிராய் (TRAI - இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) விதிமுறைகளின்படி, 1900 க்கு போர்ட்-அவுட் எஸ்எம்எஸ் அனுப்பலாம்.
பிஎஸ்என்எல் 4ஜி விரிவாக்க, 5ஜி அறிமுக பணிகள்: இந்தியா முழுவதும் அதன் 4ஜி சேவையை இன்னும் விரிவுபடுத்தும் என்றும், இந்த 4ஜி நெட்வொர்க் விரிவாக்கம் நிதியாண்டு 27 இல் தொடரும் என்று பிஎஸ்என்எல்-ன் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராபர்ட் ஜே ரவி உறுதிப்படுத்தி உள்ளார். பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மேலும் 20,000 தளங்களுக்கான ஆர்டர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இடி-யின் (ET) ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் அதன் 4ஜி வெளியீட்டில் சிறப்பாக முன்னேறி வருகிறது, மேலும் அடுத்த ஆண்டு விரிவாக்கத்தைத் தொடரும். நாடு முழுவதும் எங்கள் நெட்வொர்க் கவரேஜை வலுப்படுத்த சுமார் 20,000 கூடுதல் தளங்களுக்கான ஆர்டர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கூடுதலாக, செயல்பாட்டு செலவு (ஒபெக்ஸ்) மாதிரியில் மேலும் 10,000 தளங்களை பயன்படுத்துவதற்கான டெண்டரை நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று ராபர்ட் ஜே ரவி கூறியுள்ளார்.
டெல்லி மற்றும் மும்பையில் ஓபெக்ஸ் மாதிரியில் 5ஜி எஸ்ஏ (ஸ்டேன்ட் அலோன்) சேவையை அறிமுகப்படுத்தவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆர்டர்களை நிச்சயமாக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மட்டுமே செயல்படுத்தும். தற்போது, பிஎஸ்என்எல் முதலில் 4ஜி-ஐ விரிவுபடுத்த பார்க்கிறது, இதன் மூலம் விரைவில் அதிக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களைச் சேர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








