Home
News

BSNL சைலண்ட் சம்பவம்... ரூ.99-க்கு இனி வாய்ஸ் கால்களுடன் டேட்டாவும் வருது.. ஆனால், வேலிடிட்டி 15 நாட்கள்தான்!

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனமானது, மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டத்தில் டேட்டாவை சேர்த்துள்ளது. அதே நேரத்தில் மற்றொரு முக்கிய மாற்றத்தையும் செய்துள்ளது. இருப்பினும், ரூ.100-க்குள் கிடைப்பதால், பிஎஸ்என்எல் கஸ்டமர்களிடையே தவிர்க்க முடியாத திட்டமாக இது இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்த முழு விவரங்கள் இதோ.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மட்டுமே ரூ.99 விலையில் இருந்து வாய்ஸ் கால்கள் கொண்ட திட்டம் தொடங்குகிறது. சொல்லப்போனால், இந்த பிஎஸ்என்எல் ரூ.99 திட்டத்தில் ஆரம்பத்தில் 18 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. இந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைத்தது.

BSNL சைலண்ட் சம்பவம்... ரூ.99-க்கு இனி வாய்ஸ் கால்களுடன் டேட்டாவும்!

இதைத்தவிர வேறு சலுகைகள் அந்த திட்டத்தில் கொடுக்கப்படவில்லை. 2024ஆம் ஆண்டில் அதே திட்டத்தின் வேலிடிட்டி குறைக்கப்பட்டது. அதாவது, 18 நாட்களாக இருந்த வேலிடிட்டி 17 நாட்களாக குறைக்கப்பட்டது. இப்படி வேலிடிட்டி குறைந்தாலும், அதில் டேட்டா (Data) அல்லது எஸ்எம்எஸ் (SMS) போன்ற கூடுதல் சலுகைகள் சேர்க்கப்படவில்லை.

இப்படி இருக்கையில், இப்போது மீண்டும் அந்த திட்டத்தின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் 2 நாட்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 17 நாட்களில் இருந்த வேலிடிட்டி இனிமேல் 15 நாட்களாக கஸ்டமர்களுக்கு கிடைக்க இருக்கிறது. இந்த வேலிடிட்டி குறைப்பை சரி செய்ய, அந்த திட்டத்தில் டேட்டா சலுகையை கூடுதலாக சேர்த்துள்ளது.

இந்த டேட்டா மிகவும் குறைவாக இருப்பதால், கஸ்டமர்களுக்கு பெரிதாக இருக்கப்போவதில்லை. இருப்பினும், இந்த விலைக்கு ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்களில் திட்டங்கள் இல்லாததால், இதை தவிர்க்க முடியவில்லை. இப்போது, இந்த திட்டத்துக்கு கிடைக்கும் முழு சலுகைகளையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 99 திட்ட விவரங்கள் (BSNL Rs 99 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தை (BSNL Prepaid Plan) ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு முன்பே சொன்னதை போல 15 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் ஏற்கனவே கிடைத்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

இந்த சலுகையுடன் 50 எம்பி டேட்டா சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டேட்டா சலுகை கம்மியாக இருந்தாலும், இதற்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்திலான போஸ்ட் டேட்டாவை (Post Data) பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்கிறது. இந்த 2 சலுகைகள் தவிர வேறு எந்த சலுகைகளும் இதில் கிடைக்காது. அதே நேரத்தில் சிம் ஆக்டிவ் வருவதால், இன்கம்மிங் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

மேற்கண்ட சலுகைகளே இந்த திட்டம் கொடுக்கிறது. இதற்கு அடுத்த திட்டம் ரூ.147 விலைக்கு தொடங்குகிறது. இதில் கூடுதல் வேலிடிட்டி மட்டுமல்லாமல், டேட்டாவும் அதிகமாக கிடைக்கிறது. ஆகவே, இந்த பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதுவும் அதிகம் ரீசார்ஜ் செய்யப்படும் திட்டமாக இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 147 திட்ட விவரங்கள் (BSNL Rs 147 Plan Details): இந்த திட்டத்துக்கு 25 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் 10 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கும். இந்த சலுகைகள் மட்டுமே இதில் கிடைக்கிறது. எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 99 Plan Now Offer 15 Days Validity Unlimited Voice Calls 50MB Data Check New Changes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X